Periyar vs Seeman: பெரியாரை இழிவுபடுத்துகிறவன் ஈனப்பிறவிதான்.. சீமான் மீது துரை வைகோ தாக்கு!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் எவனாக இருந்தாலும் அவன் ஈனப்பிறவிதான்; தந்தை பெரியாரை இழிவுபடுத்தியவர்களுக்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணாகிய ஈரோடு மண்தான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி என வேண்டுகோள் விடுத்தார். ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரை ஆதரித்து துரைவைகோ எம்பி நேற்று பிரசாரம் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறியதாவது: தமிழ்நாட்டில் மதவாத பாஜக சக்திகளுக்கு இடம் கிடையாது என்பதையே சட்டசபை, லோக்சபா தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளன; இரண்டு தேர்தல்களிலும் இந்தியா கூட்டணிக்கே மக்கள் வாக்களித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாருக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

erode east by election erode east by poll by election 2025

ஈரோடு தந்தை பெரியாரின் மண்; இந்தியாவின் சமூகநீதிக்கே கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்தான் தந்தை பெரியார். தமிழ்நாட்டையும் திராவிடத்தையும் பெரியார்தான் இயக்குகிறார். பெரியாரை இழிவுபடுத்தும் சக்திகளுக்கு அவர் பிறந்த ஈரோடு மண்தான் பாடம் புகட்ட வேண்டும்.

தமிழ்நாட்டின் இன்றைய பல்வேறு துறைசார் வளர்ச்சிக்கு காரணமே கல்விதான். இந்த கல்வி வளர்ச்சிக்கு காரணமே தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும்தான். சமூக நீதி, பெண் உரிமைகளுக்காக பாடுபட்டவர்தான் தந்தை பெரியார். தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருவது குறித்து எந்த கருத்தும் நான் தெரிவிக்க விரும்பவில்லை. தந்தை பெரியாரை இழிவுபடுத்துகிறவன் யாராக இருந்தாலும் அவன் ஈனப்பிறவிதான்... ஈனப் பிறவிதான்.. ஈனப்பிறவிதான்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை பொது வேட்பாளராக கருதி அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி அறிக்கை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது; சென்னை உயர்நீதிமன்றத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு துரைவைகோ எம்பி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+