ஈவிகேஎஸ் இளங்கோவன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
ஈரோடு மாநகராட்சியில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே வார்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார்.
வாக்குக் கேட்டுச்செல்லும் இடங்களிலெல்லாம் மக்களுடைய வரவேற்பு அமோகமாக இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார்.
திருச்சியில் அண்ணா நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். மேலும், அப்போது அவர் கூறியதாவது;

ரயிலில் ஆலோசனை
பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கிய அன்றே காலையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 30 மாவட்டத்தை சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள் அடங்கிய மனுவை என்னிடம் அளித்தனர். அதனை வாங்கிக் கொண்டுதான் முதலமைச்சர் வேலூர் பயணம் மேற்கொண்ட போது ரயிலில் இது குறித்து பேசினேன்.

படிப்படியாக நிறைவேற்றுவோம்
குறிப்பாக அவர்களது கோரிக்கைகளில் எவற்றை நிறைவேற்ற முடியும், தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். இது தொடர்பாக நல்ல ஒரு முடிவை முதலமைச்சர் எடுப்பார். நிதிநிலைமைக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதனை படிப்படியாக நிறைவேற்றுகின்ற வண்ணம் எங்களது செயல்பாடுகள் இருக்கும்.

வெற்றி வாய்ப்பு
ஆசிரிய பெருமக்கள் எதற்காகவும் வருத்தப்பட வேண்டாம். இது உங்களுக்கான ஆட்சி. ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. மாநகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஒரு வார்டு மட்டுமே அதிமுக கவுன்சிலர் வசம் உள்ளது. அந்த வார்டு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீயா, நானா?
எங்களுக்கும் அந்த சேலஞ்ச் தேவை. நீயா, நானா? என பார்க்கும் அளவிற்கு நாங்களும் களத்தில் இறங்கியுள்ளோம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செல்லும் இடமெல்லாம் மக்களுடைய வரவேற்பும் சிறப்பாக உள்ளது. குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications