ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025: திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்! ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து 2023 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த நிர்வகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் அவரும் உடல்நிலை பாதிப்பால் கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் முடிவடையவிருந்ததால் ஈரோடு கிழக்குக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறையும் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த முறை திமுகவே போட்டியிடுகிறது என அறிவிக்கப்பட்டது. இதை காங்கிரஸ் நிர்வாகிகள் எல்லாம் இணைந்து ஒரு மனதாக முடிவு செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார். மேலும் திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்வோம் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது. அதன்படி ஈரோடு கிழக்கு முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாரா இல்லை அந்த தொகுதியின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வி.சி.சந்திரகுமார் 2011 ஆம் ஆண்டு தேமுதிக சார்பில் போட்டியிட்டு ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவானார். பின்னர் அவர் தேமுதிகவிலிருந்து விலகி தனிக் கட்சியை தொடங்கிய நிலையில் திமுகவில் இணைந்தார். அங்கு அவர் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.
அது போல் மாவட்ட துணைச் செயலாளராக உள்ள செந்தில் குமார், இளைஞரணி கிளை செயலாளர், மாணவரணி அமைப்பாளர், மாவட்ட பொருளாளர் பதவிகளை வகித்தவர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications