"சாக்கடை".. மேட்டருக்கு வந்த காளியம்மாள்.. "கலங்கி நிக்காதே பொண்ணே".. சீமான் மைக்கை பிடிச்சதுமே.. அட
நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் ஈரோடு தொகுதியில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்
ஈரோடு: அதிமுக, திமுகவுக்கு இணையாக நாம் தமிழர் கட்சியும் பிரச்சார கோதாவில் குதித்துள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் சீமானும், அவரது தம்பிகளும் தீயாய் ஓட்டுவேட்டையில் இறங்கி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சூரம்பட்டி , திருநகர் காலனி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சூரம்பட்டியிலிருந்து வேட்பாளர் மேனகா மற்றும் அக்கட்சி நிர்வாகிகளோடு திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் திருநகர் காலனி வரை ஊர்வலமாக சென்று கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

காசில்லயே
முன்னதாக செய்தியாளர்களிடம் சீமான் சொல்லும்போது, "கடந்த முறை தேர்தலில், வாக்கு சதவிகிதத்தில் நாம் தமிழர் கட்சி 3ம் இடம் பிடித்தது.. இப்பவும் 3வது இடத்திலேயே இருக்க முடியாது. முன்னேறி போக வேண்டும். அதுக்காகவே, இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம். வெற்றிக்கு ஒரே வழி உழைப்பு தான். அவர்களிடம் பணம் இருக்கிறது. என்னிடம் மானமுள்ள இனம் இருக்கிறது... அவர்களிடம் காசு இருக்கிறது. என்னிடம் கருத்து இருக்கிறது... என்னிடம் கோடிகள் இல்லை. கொள்கைகள் இருக்கிறது" என்று தெரிவித்து தன்னுடைய பிரச்சாரத்தை துவங்கினார்.

சீறிய சீமான்
அதேபோல, திருநகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது... அப்போது மேடையில் பேசிய சீமான் பாட்டு பாடி, வாக்கு சேகரித்தது, பொதுமக்களை ஈர்த்திருந்தது.. அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மாற்று கட்சியே நாங்கள்தான் என்று கூறிய சீமான், இந்த 2 கட்சிக்கும் ஓட்டுப்போடும் மக்கள், தோற்று போனவர்கள்தான் என்றும் காட்டமாக கூறியிருந்தார்.. மேலும் திமுக அரசு மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் வரிசைப்படுத்தி ஆவேசமாக சீறியிருந்தார்.

காளியம்மாள்
இதையடுத்து, சீமான் மேடையிலேயே திடீரென பாட்டும் பாடினார்.. சினிமா பாட்டு மெட்டிலேயே, "ஓட்டுப்போட போற பெண்ணே, ஒதுங்கி நிக்காதே.. கண்ட கண்ட சின்னம் கண்டு கலங்கி நிக்காதே.. ஓட்டுப்போட போற அக்கா, ஓட்டுப்போட போற அப்பா, ஓட்டுப்போட போற அம்மா ஒதுங்கி நிக்காதே.. உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம்" என்று மேடையில் பாடியதுமே, கூடியிருந்த கூட்டத்தினர் கைககளை தட்டியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.

சாக்கடைய பாரு
அதேபோல, தொகுதி முழுக்க, நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் ஓடி ஓடிச்சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.. குறிப்பாக, அக்கட்சியின் முக்கிய உறுப்பினர் காளியம்மாள், வீடு வீடாக சென்று, இயல்பாக பேசி வாக்கு கேட்டார்.. அங்குள்ள தெரு ஒன்றில் நடந்து சென்றபோது, எதிரே வந்த பாட்டியிடம், "இத்தனை வருஷமா அவங்களுக்கு ஓட்டு போட்டுட்டு இருக்கீங்களே.. இங்க பாருங்க.. இந்த சாக்கடையை பாருங்க.. எப்படி இருக்கு.. சரி பண்ணாங்களா யாராவது? அதனால் இந்த முறை எங்க கட்சிக்கு ஓட்டுப்போடுங்க.. மாற்றி யோசிங்க" என்று கேஷூவலாக பேசி வாக்கு கேட்டபடி சென்றார். நாம் தமிழர் கட்சியின் இந்த பிரச்சார வீடியோக்கள்தான் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கின்றன.

முதலியார்
இதற்கு நடுவில், சீமானின் பிரச்சார யுக்தி பலரையும் கவனிக்க வைத்துள்ளது. குறிப்பாக, முதலியார் ஜாதியை சேர்ந்த வேட்பாளரை சீமான் களமிறக்கிய நிலையில், அந்த தொகுதியில் உள்ள முதலியார் வாக்குகளை குறிவைத்தே, பிரச்சாரமும் அமைந்து வருகிறது.. இன்றைய தினமும், "முதலியார்" பெயர்க்காரணம் பற்றி சீமான் பேசியிருந்தார்.. 'மானத்தமிழ் மக்கள்தான் முதலியார் என்பவர்.. அந்த வரலாறெல்லாம் உங்களுக்கு தெரியுமா? சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள்தான் முதலியார்கள்.. போர் என்று சொன்னதுமே, செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள். முதல்ல வந்தவர்கள்.. அதனால்தான் முதலியார் என்று அழைக்கப்பட்டார்கள்.

நெடுஞ்செழியன்
விஜயநகரப் பேரரசு காலத்தில், பட்டாடை வேண்டும் என்று நெய்துதர கேட்டார்கள்.. ஆனால் முதலியார் ஜாதியினர் அதை செய்ய மறுத்துவிட்டனர்.. உடனே குஜராத்தில் இருந்து செளராஷ்டிரா மக்களை கொண்டு வந்து குடியேற்றம் செய்தனர்... தன்மானம் மிக்க தமிழர்கள் நாட்டில் ஜாதியை சொல்லி வாக்கு கேட்க முடியாதே.. அண்ணாவுக்கு பிறகு, நெடுஞ்செழியன் வசம் ஆட்சி போயிருந்தால் நாடு உருப்பட்டிருக்கும்... லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு தலைவன் நெடுஞ்செழியன்தான்" என்று சீமான் பேசியுள்ளார்.. இந்த வரலாற்று கதையும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications