Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் முறையாக திமுக vs நாம் தமிழர் நேரடி போட்டி.. பெரியாரின் மண் ஈரோட்டில் சீமானுக்கு அக்னி பரிட்சை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பிரதான கட்சிளான அதிமுக, பாஜக ஆகியன புறக்கணித்துள்ளன. தவெக சார்பிலும் சட்டமன்றத் தேர்தல்தான் தங்கள் குறிக்கோள் என அறிவித்துவிட்டன. இதனால் முதல்முறையாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுகவை எதிர்த்து நாம் தமிழர் நேரடியாக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வழக்கம் போல மீண்டும் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

erode by election dmk seeman

ஆனால் திடீரென்று ஈரோடு கிழக்குத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்த முறை திமுக களமிறங்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். தொடர்ந்து திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏவும், செய்தி தொடர்பு இணைச் செயலாளருமான வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஏற்கனவே 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த இடைத்தேர்தலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆளுங்கட்சியான திமுக வேட்பாளரை அறிவித்து முதல் ஆளாக களமிறங்கியது.

ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. ஏற்கனவே கடந்தாண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது. இந்த முறையும் தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் புறக்கணிப்பதாக அதிமுக கூறியது. அவர்களை போலவே தேசிய ஜனநாயக கூட்டணியும் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிவித்தது.

ஏற்கனவே தவெகவும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் தங்களின் குறிக்கோள் என அறிவித்துவிட்டன. பிரதான கட்சிகளில் நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியில் உள்ளது. இதனால் முதல்முறையாக ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுகவை எதிர்த்து நாம் தமிழர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. விரைவில் அந்தக் கட்சி வேட்பாளரை அறிவிக்க உள்ளது. பெரியார் குறித்து சீமான் வைத்த கருத்து சர்ச்சையானது. இதற்கு எதிராக திமுக போராட்டக் களத்தில் குதித்துள்ளது.

பெரியாரின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் தேர்தல் நடைபெறவுள்ளது. பெரியாரின் சொந்த மாவட்டத்தில் வைத்தே நாம் தமிழர் கட்சியை முடக்க திமுக கூட்டணி திட்டமிட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை புறக்கணித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி இன்று அல்லது நாளை வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து பேசி வருவது ஏற்கனவே பிரச்னைகளை கிளப்பி வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு எதிராக பெரியாரின் சொந்த மண்ணிலேயே தீவிரமாக பிரசாரம் செய்ய பெரியாரிய இயக்கங்கள் திட்டமிட்டு வருகின்றன. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியினரும் சீமானை ஈரோட்டில் பிரசாரம் செய்ய விட மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றன.

2023 இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளைக் கூட இந்த முறை பெற்று விடக் கூடாது என்று திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதான கட்சிகள் தேர்தலில் இல்லாதபோதிலும் திமுக Vs நாம் தமிழர் கட்சியிடையேயான போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+