சடார்னு மசூதியில் இருந்து வந்த சத்தம்.. டக்கென திரும்பிய பிரேமலதா.. அக்ரஹாரத்தில் "தொழுகை".. சபாஷ்
பிரேமலதா விஜயகாந்த்தின் பிரச்சாரங்கள் ஈரோடு கிழக்கில் மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது.
ஈரோடு: தேமுதிகவின் பிரச்சார வேகம் கூடியுள்ள நிலையில், பிரேமலதாவின் வருகையும், ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி வருகிறது. இது அக்கட்சி தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கூட்டியும் வருகிறது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுகியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக்கட்ட சூடுபிடித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மணல் மேடுபகுதியில் இருந்து சூரம்பட்டி நான்குரோடு பகுதியில் வரை தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ்ஷூம், விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும் பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சுதீஷ்ஷா
இந்த முறை தேமுதிகவின் பிரச்சாரம் தொகுதி மக்களை கவர்ந்து வருகிறது.. காரணம், இந்த தொகுதியில் மட்டும் விஜயகாந்த்துக்கு ரசிகர்கள் ஏராளம் என்கிறார்கள்.. அதனால்தான், கடந்த 2011 தேர்தலிலேயே திமுகவை இந்த தொகுதியில் தோற்கடித்தது தேமுதிக.. இப்போதும் இந்த ரசிகர் பட்டாளம் அதிகம் என்பதாலேயே, அவர்களை நம்பியே பெரிதும் களமிறங்கி உள்ளார்களாம்.. மேலும், இப்போதைக்கு எந்த அளவுக்கு தங்கள் கட்சியின் பலத்தை அதிகரிக்க முடியுமோ அவ்வளவும் எம்பி தேர்தலில் தங்களுக்கு உதவும் என்றும் தேமுதிக கணக்கு போட்டுள்ளதாம். அதைவிட முக்கியமாக, விஜய பிரபாகரனை முன்னிறுத்தும் விதமாகவும் இந்த தேர்தலை பயன்படுத்தி கொள்ள முயன்றுவருவதாகவும் தெரிகிறது.

மசூதி சத்தம்
சுதீஷ் மற்றும் விஜயபிரபாகரன் இணைந்து மேளதாளங்கள் முழங்க வீதிவீதியாய் நடந்து சென்று கொட்டுமுரசு சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து கொண்டிருக்கிறார்கள்.. சிறுமிகள், இளம்பெண்கள், விஜயகாந்த்தின் போட்டோ உள்ள மாஸ்க்கை அணிந்து வலம் வந்து மக்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்கள்.. மீன்கடை, இளநீர்கடை, என ஒரு கடை விடாமல் அங்கு நுழைந்து, வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் நெருங்கி பழகி கொண்டிருக்கிறார்கள்.. அப்படியே தங்களுக்கு வாக்குகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், பிரேமலதாவும் என்ட்ரி தந்துள்ளார்.

பாங்கு சத்தம்
ஈரோடு கிழக்கில் உள்ள அக்ரஹாரம், திருநகர்காலனி, கள்ளுபிள்ளையார்கோயில் ஆகிய பகுதிகளில் பொருளாளர் பிரேமலதா, தன்னுடைய கட்சி வேட்பாளர் ஆனந்துக்கு வாக்குகளை சேகரித்தார்.. அந்தவகையில், அக்ரஹாரம் பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் பிரேமலதா நின்றுகொண்டு வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.. அப்போது, அக்ரஹாரம் பகுதியில் உள்ள மசூதியில் இருந்து திடீரென பாங்கு சத்தம் கேட்டது. டக்கென பேச்சை நிறுத்திய பிரேமலதா, "பாங்கு சத்தம் கேட்குது.. நாமும் 5 நிமிடம் கண்களை மூடி, பிரார்த்தனை செய்வோம்" என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

பாங்கு சத்தம்
இதையடுத்து, கூடியிருந்த மொத்த கூட்டம் சத்தமின்றி கப்சிப் ஆனது.. பாங்கு சத்தம் ஒலிக்க துவங்கியதுமே கண்களை மூடிக்கொண்டார் பிரேமதா.. அங்கிருந்த அனைவருமே கண்களை மூடிக்கொண்டு, பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்.. பாங்கு சத்தம் முடியும்வரை, அமைதி காத்து, கண்களைமூடி பிரார்த்தனை செய்தார்கள்.. அதற்கு பிறகு, பிரேமலதா தன்னுடைய பிரச்சாரத்தை துவங்கினார்.. தேமுதிக என்றில்லை... எந்த கட்சி தலைவர்களாக இருந்தாலும், பாங்கு சத்தம் எங்கிருந்து கேட்டாலும், அந்த நிமிடமே தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு, தொழுகைக்கு உரிய மரியாதையை தந்துவருவது போற்றத்தக்க ஒன்றாகும்..!!

மீறிடுச்சே
இதனிடையே, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் தேமுதிக மனு ஒன்றை அளித்துள்ளது. ஈரோடு கிழக்கில் அதிக அளவில் பணப்பட்டுவடா உள்ளிட்ட விதி மீறல்கள் நடப்பதாக சொல்லி, தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி புகார் மனுக்கள் எதுவும் நடைபெறவில்லை என்று அண்மையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியிருந்தார். இந்த நிலையில், தேமுதிக மனு அளித்துள்ளது.

பறந்த கம்ப்ளைண்ட்
செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய தேமுதிக வழக்கறிஞர் அணி ஜனார்த்தனன், "இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது ஆதாரங்களுடன் புகார் தந்திருக்கிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும், முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றே புகார் தந்துள்ளோம்.. இந்த ஈரோடு இடைத் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதால்தான், தேர்தலை நிறுத்த வேண்டும் என்கிறோம். ஒருவேளை இன்று நாங்கள் கொடுத்துள்ள புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை அணுகுவோம்" என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications