ஈரோடு அருகே அந்தியூர் அரசு பஸ்ஸில்.. என்னது 100 பேருமே இல்லையா.. போலீஸ் ஏட்டு மனைவிக்கு ட்விஸ்ட்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த காவலர் அன்புராஜாவின் மனைவி மகுடேஸ்வரி நேற்று காலை அந்தியூர் அருகே உள்ள பச்சாபாளையத்தில் ஒரு திருமண விழாவில் பங்கேற்க வீட்டில் இருந்து புறப்பட்டார். கவுந்தப்பாடி பஸ் நிலையத்தில் இருந்து, அந்தியூர் செல்லும் பேருந்தில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அட்சய திருதியை நாளான நேற்று ஓடும் பேருந்தில் அவரது தங்கநகை பறிபோனது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அன்புராஜா என்பவர் நம்பியூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகுடேஸ்வரிக்கு 41 வயது ஆகிறது. மகுடேஸ்வரி நேற்று காலை அந்தியூர் அருகே உள்ள பச்சாபாளையத்தில் ஒரு திருமண விழாவில் பங்கேற்க வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். கவுந்தப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 9.30 மணியளவில் அந்தியூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.

அந்த அரசு பஸ் அந்தியூர் அருகே பிரம்மதேசம் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது மகுடேஸ்வரி அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒரு தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். 2.5 பவுன் உள்ள தங்க சங்கிலியை காணாவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மகுடேஸ்வரி பரபரப்புடன் தேடினார்.
இதனிடையே பஸ்சில் வந்த பெண்ணின் தங்க சங்கிலி மாயமானது குறித்த தகவல் பஸ் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ரத்தினவேல் பஸ்சை எங்கும் நிறுத்தாமல் நேராக அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி வந்து நிறுத்தினார். ஓடும் பேருந்தில் நகை திருட்டு போனது குறித்து அங்கிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஆண் மற்றும் பெண் போலீசார் வந்து பயணிகளை தனித்தனியாக சோதனையிட்டனர். பஸ்சில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் சோதித்தபோது,மாயமான தங்க நகை அவர்கள் யாரிடமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனிடையே வழியில் இறங்கி சென்ற யாராவது மகுடேஸ்வரியின் தங்க சங்கிலியை அபேஸ் செய்து சென்றார்களா?, அல்லது வரும் வழியிலேயே எங்காவது தங்க சங்கிலி விழுந்து விட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரித்து வருகிறார்கள்.
அட்சய திருதியை தினத்தில் தங்க நகைகள் வாங்கி சேர்க்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால் இருந்த தஙக நகை அட்சய திருதியை நால் தொலைந்து போனதால் மகுடேஸ்ரி வருத்ததில் இருக்கிறார். இன்றைய விலைக்கு 2.5 பவுன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு லட்சம் வரை தேவைப்படும்.. இப்படியான சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஓடும் பஸ்சில் போலீஸ் ஏட்டு மனைவியிடமே தங்க சங்கலி திருட்டு நடந்த சம்பவம் ஈரோடு அந்தியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
கயிறு அவிழப்போகுது.. தங்கத்தின் 'திக் திக்' நிமிடங்கள்.. ஸ்விஸ் வங்கி விடுக்கும் பயங்கர வார்னிங்! -
அமெரிக்கா போரில் பிஸி.. சத்தமின்றி சீனா உருவாக்கும் 'தங்கக் கவசம்'.. ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம் -
தங்கம் 'டல்'.. 100 ஆண்டுகளில் நடக்காத மிக மோசமான சம்பவம்.. முதலீட்டை எல்லாம் முறியடித்த சரிவு! -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. புதின் போட்ட முக்கிய உத்தரவு.. தங்கத்தை அஸ்திரமாக மாற்றிய ரஷ்யா -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications