54 பீஸ்கள்.. கொடூர நரபலி.. பத்மாவிற்காக தமிழ்நாட்டில் துடித்த "உறவு".. ஸ்டாலின்தான் மனசு வைக்கணுமாம்
ஈரோடு: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று அவரின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற நரபலி சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தி வேலை பார்த்து வந்த பத்மம் மற்றும் ரோஸ்லி ஆகிய இருவர்தான் இப்படி நரபலி கொடுக்கப்பட்டது. இதில் பத்மம் கடந்த செப்டம்பர் மாதமும், ரோஸ்லி ஜூலை மாதமும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாபி என்ற இளைஞரால் 2 பெண்கள் கடந்த 4 மாதங்களில் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்காக இந்த நரபலி நடந்துள்ளது. இவர்களின் பணக்கஷ்டத்தை போக்குவதற்காக இந்த நரபலி நடந்துள்ளது.
இந்த நரபலியில் கொல்லப்பட்ட பத்மம் தமிழ் பெண் ஆவார். இவரின் சொந்த ஊர் தருமபுரி. இவர் தனது கணவருடன்தான் கேரளாவிற்கு வந்தார். ஆனால் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் தருமபுரிக்கு திரும்பி சென்றுவிட்டார். இதனால் பத்மம் தனியாக வசித்து வந்துள்ளார். கணவனுக்கு இப்போதுதான் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று அவரின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பத்மாவின் மகன் அளித்துள்ள பேட்டியில்,செப்டம்பர் 27ம் தேதி நாங்கள் போலீசில் புகார் கொடுத்தோம். அதன்பின் நடந்த விசாரணையில்தான் நரபலி குறித்த விவரம் வெளியே வந்தது. எங்கள் அம்மாவின் உடல் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறது.
முகத்தை அடையாளம் காட்ட முடியவில்லை என்பதால் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்தனர். இதற்காக எங்களின் ரத்த மாதிரிகளை வாங்கிவிட்டு சென்றனர். அதேபோல் எங்கள் அம்மாவின் உடலில் இருந்தும் ரத்தம் எடுத்து சோதனை செய்தனர். இதன் மூலம் டிஎன்ஏ சோதனையை முடித்தனர். ஆனால் டிஎன்ஏ டெஸ்ட் செய்தும் இன்னும் உடலை கொடுக்கவில்லை. டிஎன்ஏ டெஸ்ட் செய்து 3 நாட்கள் ஆகிறது.
ஆனால் இன்னும் எங்கள் அம்மாவின் உடலை கொடுக்கவில்லை. எங்கள் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும். அவர் சாகும் போதுதான் மரியாதையாக சாகவில்லை. உடலையாவது மரியாதையாக அடக்கம் செய்ய அவர்கள் அனுமதி கொடுக்க வேண்டும். இதுதான் எங்களின் கோரிக்கை. தமிழ்நாடு அரசு இதற்காக குரல் கொடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின்தான் மனசு வைக்க வேண்டும். அவர்தான் இது தொடர்பாக கேரள அரசிடம் இருந்து கோரிக்கை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பத்மா கொச்சியில் ஏலங்குளம் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். தினமும் எர்ணாகுளம் ரயில்நிலையம் வந்து அவர் லாட்டரி டிக்கெட் விற்பனை வேலையாக செய்து வந்துள்ளார். இவர் ஏலங்குளம் பகுதியில் இருக்கும் லாட்ஜ் ஒன்றில் வசித்து வந்துள்ளார். அது தமிழர்கள் வசிக்கும் இடம். அங்கே வேலை தேடி செல்லும் தமிழர்கள் அங்கேதான் வசித்து வந்துள்ளனர்.
இவருக்கு ஆன்மீக ஈடுபாடு மிக அதிகம் என்கிறார்கள். ஆன்மீக ரீதியாக எப்போதும் பேசிக்கொண்டு இருப்பார், என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications