இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசம் எப்படி? அனுதாபம் காரணமா? - பாய்ண்ட்களை அடுக்கிய அமைச்சர் முத்துசாமி
ஈரோடு கிழக்கில் பெரிய வித்தியாசம் வர காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி பேசியுள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் பெரிய வித்தியாசத்துடன் முன்னிலை வகித்து வருகிறார். கடந்த முறையை விட மிக அதிக வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து திமுகவின் ஈரோடு தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் முத்துசாமி விளக்கியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் - 25033, அதிமுக - 8354, நாதக - 2005, தேமுதிக - 235 வாக்குகள் பெற்றுள்ளன.
திமுக கூட்டணி பெரிய வித்தியாசத்துடன் முன்னிலை வகிப்பது குறித்து, திமுகவின் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றிய அமைச்சர் முத்துசாமி பேசியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், 2 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது.

இளங்கோவன் தொடர் முன்னிலை
ஈரோடு கிழக்குத் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் 25,033 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் 8354, நாம் தமிழர் கட்சி 2005 வாக்குகளையும், தேமுதிக 235 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். கடந்த முறை சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்த நிலையில், தற்போதே அந்த வித்தியாசத்தைக் கடந்து தொடர் முன்னிலை வகித்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

வாக்கு வித்தியாசம் தொடரும்
திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளராகச் செயல்பட்ட திமுக அமைச்சர் முத்துசாமி இதுகுறித்துப் பேசியுள்ளார். அமைச்சர் முத்துசாமி பேசுகையில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு வித்தியாசம் இப்படியே தொடரும் என்றுதான் தோன்றுகிறது. ஓரிரு இடங்களில் வாக்குகள் கூடவோ குறையவோ செய்யலாம். ஒரு நல்ல லீடிங் வரும் என்றுதான் கருதுகிறேன்.

களத்தில் ரெஸ்பான்ஸ்
நாங்கள் முக்கியமாக பேசியது 2, 3 விஷயங்கள்தான். திமுக அரசு மக்களுக்குச் செய்துள்ள நன்மைகள், திட்டங்கள் பற்றியே நாங்கள் எடுத்துரைத்தோம். அதில் மக்களுக்கு ஒரு திருப்தியும், நம்பிக்கையும் ஏற்பட்டது. நாங்கள் களத்திற்குச் செல்லும்போதே எதிர்க்கட்சியினர், எங்களிடம் என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் இதுவரை கொண்டு வந்த திட்டங்கள், இனி செயல்படுத்தப்போகும் விஷயங்களைச் சொன்னோம். அதற்கு களத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

திமுகவின் பெர்ஃபாமன்ஸ்
திமுக அரசின் பெர்ஃபாமன்ஸ் அடிப்படையில் மக்கள் வாக்களித்துள்ளனர். திமுக மீதான மக்களின் நம்பிக்கை இந்த இடைத்தேர்தலில் எதிரொலித்துள்ளது. மேலும், எங்கள் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை, அந்த குடும்பத்தினர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் இந்த பெரிய வித்தியாசத்துக்கு காரணம்.

அனுதாபம் காரணமா?
ஈரோடு மாநகராட்சியில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் இருந்தபோதே தொடர்ந்து வந்தது. திருமகன் ஈவெரா இருக்கும்போதே நானும், அவரும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்து பல பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெற்றுத் தந்தோம். இதெல்லாம் கண்ணுக்கு எதிரிலேயே மக்களுக்கு தெரிகிறது. திருமகன் ஈவெரா மீது மக்களுக்கு நல்ல எண்ணம் இருந்தது. ஆனால், அந்த அனுதாபம் காரணமாகவே இப்போது ஒட்டு போட்டார்கள் என்று சொல்ல முடியாது.

அடைத்து வைக்கவில்லை
நாங்கள் வாக்காளர்களை கூட்டி வந்து அடைத்து வைத்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். ஆனால், மக்களை அப்படி எல்லாம் அடைத்து வைத்து விட முடியுமா? இன்னும் சொல்லப்போனால், அதிமுகவினர் எங்கள் காரியாலயத்தில் இருந்தவர்களை வந்து அழைத்தார்கள். ஆனால், யாருமே போகவில்லை. நாங்கள் வாக்கு சேகரிக்கச் செல்லும்போது அத்தனை மக்களும் வந்தார்கள். அவர்களை நாங்கள் அடைத்து வைத்தது உண்மையாக இருந்தால், ஓட்டு கேட்கும்போது அவர்கள் ஏன் வரப் போகிறார்கள்? எனவே, அந்த குற்றச்சாட்டுகள் தவறானவை. சட்டப்பூர்வமாகவே, நாங்கள் வாக்கு சேகரித்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!











Click it and Unblock the Notifications