நான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்?
தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஈரோடு: தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வருவார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடைகிறது. இதனால் இன்று கட்சிகள் எல்லாம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. லோக்சபா தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

என்ன சொன்னார்
முதல்வர் பழனிசாமி தனது பேச்சில், விவசாயத்துறைக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அவை ஸ்டாலினுக்கு தெரியவில்லை. நான் விவசாயிகளுக்காக பணியாற்றுகிறேன். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்த விவசாயி. எனக்கு அவர்களின் கஷ்டம் புரியும்.

ஒரு விவசாயி
இப்போது ஒரு விவசாயிதான் உங்களுக்கு முதல்வராக இருக்கிறார். நாளை நான் முதல்வராக இல்லையென்றாலும் இன்னொரு விவசாயிதான் முதல்வராக வருவார். இனி தமிழகத்தை எப்போதும் ஆளப்போவது விவசாயிதான். நான் முதல்வராக இல்லாவிட்டால் எனக்கு பதில் இன்னொரு விவசாயி முதல்வர் ஆவார் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு இருந்தார்.

பழனிச்சாமி எப்படி
முதல்முறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இப்படி பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நான் முதல்வராக இல்லாமல் போனாலும் இன்னொரு விவசாயிதான் முதல்வர் ஆவார் என்று பழனிச்சாமி கூறியுள்ளார். முதல்வர் ஏன் இப்படி பேசுகிறார், இப்போதே ஏன் அடுத்த முதல்வர் குறித்து பேசுகிறார் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

அதிமுக மாற்றம்
அதிமுக இந்த தேர்தலுக்கு பின் பல மாற்றங்களை சந்திக்க இருக்கிறது என்று கட்சிக்கு நெருக்கமான நபர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 8 இடங்களை ஜெயிக்க வேண்டும். சரியான கணக்குப்படி 4 இடங்களை வென்றால் போதும். ஆனால் அதிருப்தி உறுப்பினர்கள் இருப்பதால் மொத்தம் 8 இடங்களை வென்றால்தான் ஆட்சியை காப்பாற்ற முடியும்.

ஆட்சி எப்படி
இதனால் தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சியை காப்பாற்ற வேறு ஒரு நபர் கூட முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இல்லாத இன்னொரு நபர் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது. சுயேட்சைகள், சமயத்தில் டிடிவி தினகரனின் அமமுக உதவியுடன் அதிமுக ஆட்சி அமைய கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்போது கண்டிப்பாக புதிய முதல்வர் ஒருவர் வருவார் என்று கூறுகிறார்கள்.

யார் அவர்
இதை கருத்தில் கொண்டுதான் முதல்வர் இப்போதே இப்படி பேசினார். காரணம் இல்லாமல் அவர் அடுத்த முதல்வர் குறித்து பேசவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் பழனிச்சாமி எந்த விவசாயியை முதல்வர் ஆக போகிறார் என்று மறைமுகமாக கூறினார் என்பதுதான் இன்னும் புரியாத புதிராக இருக்கிறது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!












Click it and Unblock the Notifications