ஈரோடு கிழக்கு: 2021, 2023-ல் தமாகா, அதிமுக வாங்கிய ஓட்டுகள் மொத்தமாக நாதகவுக்கு கிடைத்தால் திமுக?
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். திமுகவின் விசி சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி ஆகியோர் நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போதைய நிலையில் திமுக vs நாதக என இருமுனைப் போட்டி நிலவும் நிலையில் எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகளும் நாதகவுக்கு கிடைத்தால் திமுக கடும் போட்டியை சந்திக்க நேரிடும் என்கிறது களநிலவரம்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதையடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் திமுகவின் வேட்பாளராக விசி சந்திரகுமார் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டு ஏற்கனவே வென்றவர் விசி சந்திரகுமார். தற்போது திமுக வேட்பாளராக களம் காண்கிறார்.
அதேநேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டன. அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் சீதாலட்சுமி என்ற வேட்பாளரை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இத்தொகுதியில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். திமுகவின் விசி சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி ஆகியோர் நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.
2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகளைப் பெற்றார். அதிமுகவின் தென்னரசு 43, 923, நாம் தமிழர் கட்சியின் மேனகா 10,827 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
2021-ம் ஆண்டு காங்கிரஸின் திருமகன் ஈவெரா 67,300 வாக்குகளையும் பாஜக கூட்டணி வேட்பாளர் தமாகாவின் யுவராஜா 58,396 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சியின் கோமதி 11,629 வாக்குகளையும் பெற்றிருந்தனர். மக்கள் நீதி மய்யத்தின் ராஜ்குமார் 10,005 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
தற்போதைய தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியின் தாமக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமிக்கு கிடைத்தால் திமுகவுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications