ஆர்.கே நகர் டோக்கன் பாணியில் அரங்கேறிய கள்ளக்காதல்... புதுசா இருக்கு, எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா!
Recommended Video

ஈரோடு : ரூ. 20 நோட்டில் செல்போன் எண்ணை பதிவிட்டு புழக்கத்தில் விட்ட ஈரோடு பெண்ணிற்கும் கோவையை சேர்ந்த இளைஞருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஓட்டம் பிடிக்கும் அளவு போயுள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுண்டச்சி பாளையத்தை சேர்ந்த மூர்த்தி கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி பால அளவையராக இருந்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு 20 ரூபாய் நோட்டில் தன்னுடைய மொபைல் எண்ணை எழுதி வைத்து அதனை புழக்கத்தில் விட்டுள்ளார் வளர்மதி.
கோவை மாவட்டம் ஜல்லிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு இந்த இருபது ரூபாய் நோட்டு ஒன்று கிடைத்துள்ளது. அதிலிருந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு வளர்மதியிடம் செந்தில்குமார் பேசியுள்ளார். எதேச்சையாக செந்தில்குமார் வளர்மதியிடம் பேச நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

தனிமையில் ஜாலி
இருவரும் ஜாலியாக ஊர் சுற்றியுள்ளனர். வெளியூர் சென்று இருவரும் பலமுறை தனிமையிலும் இருந்துள்ளனர். குடும்பத்தினருக்குத் தெரியாமல் வளர்மதி செந்தில்குமாருடன் பழகி வந்துள்ளார்.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வளர்மதியிடம் செந்தில்குமார் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு தொடக்கத்தில் மறுப்பு தெரிவித்த வளர்மதி பின்னர் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கடந்த 19ம் தேதி செந்தில்குமாருடன் வளர்மதி கோவை புறப்பட்டு சென்று விட்டார்.

போலீசில் சிக்கினார்கள்
இதனை அடுத்து வளர்மதியின் தாயார் அரச்சலூர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஜல்லிப்பட்டி பகுதியில் செந்தில்குமார் வீட்டில் தங்கியிருந்த வளர்மதியை போலீசார் மீட்டனர். செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

என்னா டெக்னிக்கு
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இருபது ரூபாய் நோட்டில் ரகசிய குறியீடு எண்ணை கொடுத்து அதனை வாக்காளர்கள் தேர்தல் முடிந்த பின்னர் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஓட்டுக்கு பணம் தர அரங்கேறிய புது டெக்னிக் போல இருபது ரூபாய் நோட்டை வைத்து புது பாணியில் கள்ளக்காதல் விஷயம் அரங்கேறியுள்ளது. இதெல்லாம் பார்க்கும் போது என்னா மாதிரி புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications