வீழ்ந்த விஜயகாந்த் கட்சி.. இப்படியா ஆகனும்..சுயேச்சையிடம் திணறி மீண்ட தேமுதிக..பெற்ற ஓட்டு தெரியுமா?
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஆனந்த், சுயேச்சை வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற முடியாமல் திணறி பின் மீண்டார்.
ஈரோடு: இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளரை விட சுயேச்சை வேட்பாளர் அதிக ஓட்டு பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1177 ஓட்டுகள் பெற்ற நிலையில் சுயேச்சை வேட்பாளர் முத்துபாவா 311 வாக்குகள் பெற்றிருந்தார். சுயேச்சை வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற வேண்டுமே என்று திணறிய ஒருவழியாக 900 வாக்குகளை தாண்டினார் ஆனந்த். பிரேமலதா, விஜய பிரபாகரன் தொடர்ந்து பிரச்சாரம் செய்தும் கை கொடுக்கவில்லை.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி 238 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 5 சுற்றுகள் முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இந்த வெற்றியை திமுக காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் பேட்டியிட்டனர். இதில் சுயேச்சை வேட்பாளர்களும் சுறுசுறுப்பாக வாக்கு சேகரித்தனர். அரசியல் கட்சியினர் பல வழிகளில் பிரச்சாரம் செய்தாலும் சுயேச்சை வேட்பாளர்களும் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

முதல் சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் குறைவான வாக்குகளை பெற்றிருந்தார். இரண்டு சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 220 வாக்குகள் பெற்ற நிலையில் சுயேச்சை வேட்பாளர் முத்துபாவா 261 வாக்குகள் பெற்றிருந்தார்.
அடுத்தடுத்த சுற்றுகள் அறிவிக்கப்பட்டன. ஒருவழியாக தேமுதிக வேட்பாளர் ஆனந்த் சுயேச்சை வேட்பாளரை விட கூடுதலாக வாக்குகள் பெற்றார். 336 வாக்குகள் பெற்றார் ஆனந்த். அதே நேரத்தில் சுயேச்சை வேட்பாளர் முத்துபாவா 275 வாக்குகள் பெற்றார். படிப்படியாக ஆனந்தின் வாக்குகள் அதிகரித்தன. 15வது சுற்று முடிவில் தேமுதிக ஆனந்த் 1177 வாக்குகள் பெற்ற நிலையில் சுயேச்சை வேட்பாளர் முத்துபாவா 329 வாக்குகள் மட்டுமே பெற்றார். நாடாளும் மக்கள் கட்சியைச் சேர்ந்த தனலட்சுமி 259 வாக்குகள் பெற்றார். மற்றொரு சுயேச்சை வேட்பாளர் தீபன் சக்கரவர்த்தி 237 வாக்குகள் பெற்றார். முகமது அலி ஜின்னா என்ற சுயேச்சை வேட்பாளர் 61 வாக்குகள் பெற்றார். பல சுயேச்சைகள் 5 முதல் 10 வாக்குகள் கூட பெறவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி ஒரு காலத்தில் தேமுதிக வெற்றி பெற்ற தொகுதி. படிப்படியாக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக படிப்படியாக வாக்கு சதவிகிதம் சரிய ஆரம்பித்தது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தொகுதியை அமமுகவிற்கு தேமுதிக விட்டுக்கொடுத்தது. கூட்டணி அமைத்து போட்டியிட்டும் 1204 வாக்குகள் பெற்று 6வது இடம் பெற்றார் அமமுக வேட்பாளர்.
இந்த நிலையில் இந்த முறை ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்கப்போவதாக கூறினார் பிரேமலதா. அதன்படி முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்து பிரச்சாரமும் செய்தார். விஜயகாந்த் மகனும் பிரச்சாரம் செய்தார். இருவரும் தொகுதிகளில் மக்களை சந்தித்தும் 2000 வாக்குகள் கூட பெற முடியவில்லை என்பதுதான் சோகம்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications