நடுராத்திரி.. அம்மாவை கொன்று.. ரகசியமாக சுடுகாட்டில் குழிதோண்டி புதைத்த மகன்கள்.. ரூ.2 ஆயிரத்துக்காக
2 ஆயிரம் ரூபாய்க்காக தாயை கொன்று புதைத்த மகன்கள் கைதாகி உள்ளனர்
ஈரோடு: குடிக்க வெச்சிருந்த பணத்தில் அம்மா மளிகை சாமான் வாங்கிட்டாராம்.. அதனால் பெற்ற தாயை 2 மகன்கள் சேர்ந்து கொன்று, சுடுகாட்டில் கொண்டு போய் குழி தோண்டி புதைத்தே விட்டனர். ஈரோட்டில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் வஉசி நகரை சேர்ந்தவர் சரோஜா.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. ஒருவர் பெயர் விக்னேஷ், இன்னொருத்தர் பெயர் அருண்குமார்.. 2 பேரும் குடிகாரர்கள்.
இந்நிலையில், வீட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து, சரோஜா மளிகை, காய்கறிகளை வாங்கி போட்டுள்ளதாக தெரிகிறது.. இதனால் நடுராத்திரி 2 மகன்களும் வீட்டில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை தேடி இருக்கிறார்கள்.

சரோஜா
பணம் இல்லை என்றதும் தூங்கி கொண்டிருந்த அம்மாவை எழுப்பி கேட்டுள்ளனர்.. அதற்கு சரோஜா, பணத்தை வீட்டு செலவுக்கு எடுத்துட்டேன் என்று சொல்லவும், 2 மகன்களுக்கும் ஆத்திரம் மண்டைக்கு ஏறிவிட்டது. அம்மா என்றும் பாராமல், நடுராத்திரி என்றும் பாராமல் ஆளுக்கு ஒரு பக்கம் சரோஜாவை தாக்க ஆரம்பித்தனர்.. பிறகு ஒரு இரும்பு கம்பியை எடுத்துவந்து சரோஜா மண்டையிலேயே போட்டனர்.

ஆம்புலன்ஸ்
இதில் மண்டை பிளந்து அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.. இதை பார்த்ததும் 2 பேருக்கும் பயம் வந்துவிட்டது.. அதனால், உடனடியாக ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்து தனியார் ஆஸ்பத்திரிக்கு ஏற்றி கொண்டு சென்றனர். நடந்த இந்த சம்பவம் அத்தனையையும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டே இருந்தனர்.. ஆனால் ஆஸ்பத்திரிக்கு போன சரோஜா திரும்பி வரவே இல்லை.

இரும்பு கம்பி
அதனால், அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியாததால் சிலர் ஈரோடு தெற்கு போலீசாருக்கு விஷயத்தை சொன்னார்கள். அதன்பேரில் போலீசார் 2 மகன்களிடம் விசாரணை நடத்தியபோதுதான் அந்த பகீர் விஷயத்தை சொன்னார்கள். இரும்பு கம்பியால் மண்டையை பிளந்தபோதே சரோஜாவுக்கு உயிர் போய்விட்டதாம்..

சுடுகாடு
அதன்பிறகு உடம்பு சரியில்லாத மாதிரி வெளியில் காட்டி கொள்ளவே ஒரு ஆம்புலன்ஸ் வரவழைத்தாகவும், ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகாமல் நேராக சுடுகாட்டுக்கு போனதாகவும் கூறினர். பின்னர். சுடுகாட்டிலேயே ஒரு குழியை தோண்டி அம்மாவின் சடலத்தை புதைத்துவிட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சுடுகாட்டுக்கு சென்று, புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்ய ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

கைது
வெறும் 2 ஆயிரம் பணத்துக்காக, அதுவும் குடிக்க பணம் இல்லாததால் பெற்ற தாயை மகன்களே அடித்து கொன்று புதைத்த சம்பவம் ஈரோடு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தள்ளது.. இந்த நாசமா போன குடி இன்னும் என்னென்ன செய்ய போகுதா? எத்தனை உயிரை காவு வாங்க போகிறதோ?!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications