ஜெ. சந்திக்காததா? தோல்வி பிரச்சனையே இல்லை..எடப்பாடியின் பிளானே வேறயாமே.. ஆஹா இது வேறயா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் தோல்வி அடைவதை பற்றி கவலைப்படவில்லை என்று அரசியல் விமர்சகர் ரிஷி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 60 சதவிகிதத்திற்கும் மேலாக வாக்குகள் பெற வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் விமர்சகர் ரிஷி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் சூடு பிடித்து உள்ளது. இந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆளும் தரப்பில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். 11 அமைச்சர்களை களமிறக்கி திமுக கூட்டணி இங்கே தீவிரமாக பணிகளை செய்து வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தற்போது பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக வேட்பாளரை தேர்வு செய்ய வாக்களிக்கப்பட்ட வாக்கு சீட்டுகளை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளார். இன்று இரவிற்குள் அதிமுகவின் பொது வேட்பாளர் இறுதி செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கில் களநிலவரம் எப்படி இருக்கும் என்று அரசியல் விமர்சகர் ரிஷி ஒன்இந்தியாவிற்கு யூ டியூபிற்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி

பேட்டி

அவர் அளித்த பேட்டியில், இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்பதே கடந்த 20 வருடமாக நடந்து வந்தது. வலிமை குறைவான தொகுதிகளில் கூட ஆளும் கட்சிகளும் இதற்கு முன் ஜெயித்து இருக்கின்றன. ஆளும் கட்சி வெற்றிபெறும் என்பது எல்லோரும் தெரியும். பண பலம், அதிகார பலம் எல்லாம் இருக்கிறது. பண பலம் எல்லா கட்சிக்கும் இருக்கிறது. அதிகார பலம் திமுக பக்கம் இருப்பதால் அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு வாய்ப்பு. கே. என் நேரு, செந்தில் பாலாஜி, கேஎஸ் ஆர் ராமசந்திரன், ஏவ வேலு இப்படி இவர்கள் எல்லாம் இருக்கும் போது திமுகவின் வெற்றிக்கே வாய்ப்பு அதிகம்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 60 சதவிகிதத்திற்கும் மேலாக வாக்குகள் பெற வாய்ப்புகள் உள்ளன. அதிமுகவில் எதிர்பக்கம் நிர்வாகிகள் பிரிந்து கிடக்கிறார்கள். அதனால் அவர்களின் வாக்குகள் சரியும். ஈரோடு கிழக்கில்கொங்கு வேளாள கவுண்டர்கள் வாக்குகள் அதிகம் எடப்பாடி தரப்பிற்கு செல்லும். அதனால் அவரின் தரப்பு இரண்டாம் இடம் வகிக்கும். செங்குந்த முதலியார் வாக்குகள் நாம் தமிழர், அமமுக என்று பிரியும். இப்போது ஓபிஎஸ் - எடப்பாடி - பாஜக சேர்ந்து இருப்பதால் அங்கே எடப்பாடி வேட்பாளர் டெபாசிட் வாங்குவார்.

தென்னரசு

தென்னரசு

தென்னரசு டெபாசிட் வாங்குவார். ஃடப் கொடுப்பார். ஆனால் அவரால் பெரிய வாக்குகளை பெற முடியாது. 60 க்கும் அதிகமான வாக்குகளை பெறவே ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பிற்கு வர வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் தோல்வி அடைவதை பற்றி கவலைப்படவில்லை. ஜெயலலிதாவும் வரிசையாக தோல்வியை சந்தித்து இருக்கிறார். இப்போது இந்த தேர்தலில் ஆளை நிறுத்துவதன் மூலம் தனது பலத்தை நிரூபிக்க எடப்பாடி பார்க்கிறார். கட்சியில் தனது அதிக ஆதரவு உள்ளது என்பதை காட்ட விரும்புகிறார். அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர எடப்பாடி நினைக்கிறார்.

எடப்பாடி

எடப்பாடி

எடப்பாடியின் கொள்கை எல்லாம் 2026 சட்டசபை தேர்தல்தான். அதுதான் அவரின் நோக்கம். இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் இங்கே நிற்கிறார். அவர் கொஞ்சம் வாக்குகளை பிரிப்பார். ஆனால் அவர் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் வகையில் இருக்க மாட்டார். எதிர்க்கட்சி வாக்குகளை பிரிப்பர். மாறாக ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் அதிக வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது. 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக அவர் வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது. இரண்டாவது இடத்தை தென்னரசு வென்றாலும் கூட.. அவர் எடப்பாடியின் வேட்பாளர் என்று சொல்ல முடியாது. அவரை வேண்டுமானால் தமிழ் மகன் உசேனின் வேட்பாளர் என்று வைத்துக்கொள்ளலாம். தென்னரசு இரண்டாம் இடம் வந்தாலும் அதை ஈபிஎஸ் வெற்றியாக பார்க்க முடியாது, என்று அரசியல் விமர்சகர் ரிஷி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+