"சுதா.. உன்னை மறக்க முடியலை.. பார்க்கணும்".. நம்பி சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது!
கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்
ஈரோடு: "சுதா.. உன்னை பார்க்கணும்.. மறக்க முடியலை.." என்று சொன்னதை கேட்டு நம்பி சென்ற இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்!
ஈரோடு அருகே கதிரம்பட்டியை சேர்ந்த தம்பதி காளிமுத்து - சுதா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். காளிமுத்து ஒரு தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்க்கிறார், சுதா மேட்டுக்கடையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக சுதா வேலைக்கு போகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தைகள் ஸ்கூலுக்கும், காளிமுத்து வேலைக்கும் போய்விட்ட நிலையில் சுதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் வேலை முடித்து வந்து பார்த்தால் சுதாவை காணோம். எங்கு போனார் என்று தெரியாததால் அவரை காளிமுத்து உட்பட சொந்தக்காரர்கள் தேட ஆரம்பித்தனர்.

ரத்த வெள்ளம்
இந்தநிலையில் இரவு 10.15 மணிஅளவில் கதிரம்பட்டியில் உள்ள ஒருகாலி கிரவுண்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் உள்ளார் என்ற தகவல் பரவியதால், காளிமுத்து அங்கு ஓடினார். அங்கு சுதா, ரத்தக்கறையுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள், ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும், பிறகு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். இப்போது சுதாவுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

செல்போன் கடை
இது சம்பந்தமாக ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தியதில் முதல்கட்டமாக சில விஷயங்கள் தெரியவந்துள்ளது. சுதாவுக்கு தான் வேலைப்பார்த்த செல்போன் கடை ஓனர் கோகுல் மீது கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இது ஒரு வருடமாக இருந்திருக்கிறது. ஆனால் சுதா வேறு யாரிடமோ போனில் பேசி வந்ததாகவும், இதனால் கோகுலுக்கு ஆத்திரம் வந்து சுதாவுடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மறக்க முடியலை
இந்த ஆத்திரத்தில்தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுதாவை வேலையிலிருந்து கோகுல் நீக்கி உள்ளார். வேலையை விட்டு நிறுத்தினாலும் சுதாவை மறக்க முடியவில்லை. அதனால்தான், "சுதா.. உன்னை பார்க்கணும்.. மறக்க முடியவில்லை" என்று சொல்லவும், அதை நம்பி சுதா சென்றுள்ளார்.

உண்மை காரணம்?
அப்போதுதான், மீண்டும் தகராறு வந்து ஆத்திரமடைந்த கோகுல், மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாவின் கழுத்தை அறுத்துவிட்டு, தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, இப்போது போலீசார் பிடியில் கோகுல் சிக்கி உள்ளதால் விசாரணை நடக்கிறது. இதன் பின்னரே, இந்த சம்பவத்துக்கான முழு காரணம் தெரியவரும்!
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications