ரிசல்ட் வந்த சிறிது நேரத்திலேயே நன்றி அறிவிப்பு! ஈரோட்டில் 4 வார்டுகளை சுற்றி வந்த அன்பில் மகேஷ்!
முதல் ஆளாக வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ்.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் தனக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்த 4 வார்டுகளிலும் நன்றி அறிவிப்பு கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
ரிசல்ட் வந்த சிறிது நேரத்திலேயே திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு 4 வார்டுகளையும் சுற்றி வந்தார்.
தேர்தலில் ஜெயித்தோமோ ஈரோட்டில் இருந்து மூட்டையை கட்டினோமா என்றில்லாமல் வாக்களித்த மக்களுக்கு உடனடியாக நன்றி தெரிவித்து கவனம் ஈர்த்துள்ளார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த ஒரு மாதமாக தேர்தல் பணியாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அதிமுக வாக்கு வங்கி அதிகம் உள்ள 20,21,22,23 ஆகிய 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதனை ஒரு தனிப்பட்ட சேலஞ்சாக எடுத்துக்கொண்டு முழுமையாக அங்கேயே முகாமிட்டு தீவிர களப்பணியாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷும் அவரது டீமும் இளங்கோவனை மேற்கண்ட 4 வார்டுகளில் மட்டும் 1117 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற வைத்தது.

சுடச்சுட நன்றி
இதனிடையே நேற்று தேர்தல் முடிவுகள் வெளி வந்துகொண்டிருக்கும் போதே ஈரோடு சென்றடைந்த அமைச்சர் அன்பில் மகேஷ், தாம் தேர்தல் பணியாற்றிய 4 வார்டுகளுக்கும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இவ்வளவு சீக்கிரமாக நன்றி தெரிவிக்க அமைச்சர் வருவார் என்பதை எதிர்பார்க்காத சூரியம்பாளையம் மற்றும் அன்னை சத்யா நகர் பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் அன்பில் மகேஷை வரவேற்றனர்.

விரைவில் தீர்வு
ஓட்டுக்கேட்டு சென்ற போது தன்னிடம் பொதுமக்கள் முன் வைத்த கோரிக்கைகள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என்ற உறுதியையும் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்தார். இவருடன் அமைச்சர் முத்துசாமியும் இந்த நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார். வேறு எந்த அமைச்சரும் சீனியர் அமைச்சர்கள் உட்பட அன்பில் மகேஷை போல் நன்றி தெரிவிக்க இன்னும் ஈரோடு செல்லவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பெரிய டீம்
தேர்தலில் ஜெயித்தோமோ ஈரோட்டில் இருந்து மூட்டையை கட்டினோமா என்றில்லாமல் வாக்களித்த மக்களுக்கு உடனடியாக நன்றி தெரிவித்து கவனம் ஈர்த்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷுடன் திருச்சி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெரிய டீம் ஈரோடு இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications