அப்பா இறந்துட்டாரு.. கோவையில் இருந்து வந்த தகவல்.. அந்த நிலையிலும் நெகிழ வைத்த அமைச்சர் சாமிநாதன்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தந்தை இறந்த நிலையிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றதை கண்டு பொதுமக்கள் நெகிழ்ந்து போனார்கள்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரைச் சேர்ந்த பெருமாள்சாமி (94) தங்கமணியின் மகன் தான் தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாதனின் தாயார் தங்கமணி இறந்துவிட்டார்.

இந்நிலையில் தந்தை பெருமாள் சாமி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சமீப நாட்களாக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று காலை பெருமாள் சாமி காலமானார்.
இதனிடையே ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நேற்று கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, முருங்கத்தொழுவு ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோவையில் வயது முதிர்வு காரணமாக அமைச்சரின் தந்தை பெருமாள்சாமி கவுண்டர் நேற்று காலை உயிரிழந்த தகவலை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அமைச்சரை தொடர்பு கொண்ட திமுக நிர்வாகிகள், '300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் விழா நடக்கும் அரங்குக்கு வந்து விட்டனர். எனவே அரசு அதிகாரிகள் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் உங்கள் தந்தையின் இறுதி சடங்கை கவனியுங்கள்' என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்..
ஆனால் அதற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மறுத்துவிட்டார். மேலும் தான் உறுதியளித்தபடி சென்னிமலை பகுதியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பிறகுதான் தந்தையின் இறுதி சடங்குக்கு செல்வேன்' என்று கூறியிருக்கிறார். அதன்படியே சென்னிமலை பகுதியில் நடந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டிருக்கிறார்.
பெண் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்க நாணயங்களை தன் கையால் வழங்கிய அமைச்சர் சாமிநாதன் அதன் பின்னரே சொந்த ஊரான முத்தூருக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது ஒருபுறம் எனில் அமைச்சர் சாமிநாதன் விழாவை முடித்துவிட்டு சென்ற பிறகு தான் விழாவில் பங்கேற்ற பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அமைச்சரின் தந்தை காலையில் உயிரிழந்த விஷயம் தெரிய வந்தது. இது பார்த்து பொதுமக்கள் நெகிழ்ந்து போனார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications