"குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000" ஸ்டாலினின் அறிவிப்பு தேர்தல் விதிகளுக்கு எதிரானது.. அதிமுக புகார்!

மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என அதிமுக குற்றச்சாட்டியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை பற்றிய அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து அதிமுகவின் இன்பதுரை புகாரளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்க உள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்

மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. நீட் தேர்விற்கு உரிய மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கின்றோம். ஆளுநரோ, மத்திய அரசோ இதுவரை அதற்கு அனுமதி வழங்கவில்லை.

5 ஆண்டுகள் தேவையில்லை

5 ஆண்டுகள் தேவையில்லை

என்னுடைய ஆட்சி காலத்தில் நீட் தேர்வு விலக்கு பெறவேண்டும் என்பது லட்சியம். இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது. திமுக அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக நாங்கள் சொல்லவில்லை. ஆனால் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் 85 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்தாண்டு தேவையில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம்

இந்த ஆண்டுக்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றபடும். எதிர்க்கட்சி தலைவர், மக்கள் மறந்தாலும் முக்கியமான வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாக்குறுதியை நான் மறக்க மாட்டேன். பெண்களுக்கான உரிமை தொகை மாதம் ஆயிரம் வழங்கப்படும். நிதி நிலைமை ஒழுங்காக வைத்திருந்தால் வந்தவுடன் கொடுத்து இருப்போம். வரும் மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கையில் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்பது அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

 அதிமுக புகார்

அதிமுக புகார்

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 குறித்த அறிவிப்பு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரை சந்தித்து அதிமுகவின் இன்பதுரை புகார் மனு அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+