Vijay: என் வீட்டுல 9 பேரு! விஜய்க்கு ஓட்டு போடலைன்னா சோற்றுல விஷம்தான்.. கொங்கு தமிழில் பெண் பகீர்
ஈரோடு: என் ஓட்டு விஜய்க்குத்தான். எங்கள் வீட்டில் 9 ஓட்டு இருக்கு. விஜய்க்கு யாராவது போடலைன்னா அவங்களுக்கு சோற்றுல விஷம் வச்சிடுவேன் என ஈரோட்டில் பொதுக் கூட்டம் முடிந்து வீடு திரும்பிய பெண் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரோடு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரங்கம்பாளையத்தை சேர்ந்த கோகிலா என்ற பெண் கூறுகையில், ஈரோட்டில் விஜயை பார்க்க நிறைய கூட்டம் இருக்கிறது. கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. எனினும் விஜய்யை பார்க்க வந்திருக்கிறேன்.
கூட்டத்தில் எப்படியும் பத்திரமா வீடு போய் சேரணும். நான் இதுவரை இரு முறை ஓட்டு போட்டுள்ளேன். ஒரு முறை அதிமுகவுக்கு, அடுத்த முறை சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டேன். ஆனால் இந்த முறை சீமான் அண்ணனுக்குத்தான் போடுவேன்.
தற்போது யாருமே சரியாக ஆட்சி செய்வதில்லை. எந்த ஆட்சியிலும் எந்த சலுகையும் இல்லை. எல்லாம் இலவசம் என்கிறார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை, சாலை வசதி சரியாக இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை. ஆட்சியாளர்கள் மட்டும் சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால் ஓட்டு போட்ட மக்கள்தான் திண்டாடுகிறார்கள்.
விஜய் முதல்வராக வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். மக்களுக்கு நல்ல சலுகைகளை கொடுப்பார். சீமான் விவசாயம், மரம் என இயற்கையை சார்ந்து அரசியல் செய்தார், தமிழ் தேசியம் பேசினார். அப்போது விஜய் வராததால் நான் சீமான் கட்சிக்கு ஓட்டு போட்டேன்.
இப்போதுதான் விஜய் வந்துட்டாருல்ல! எங்கள் அண்ணன் தேர்தலில் நிற்கும் போது யாருக்கு ஓட்டு போட வேண்டும்? எங்க அண்ணனுக்குத்தான்.
இலவச பஸ் பயணம் என்கிறார்கள். எங்களால் 5 ரூபாய் கொடுத்து பஸ்ஸுல போக முடியாதா? இது ஒரு சலுகையா, மக்களுக்கு வீடு கட்டி தர வேண்டும். நல்ல சாலை வசதிகளை செய்து தர வேண்டும். விஜய் வந்தால் வீடு, கார், பைக் என சொல்லியிருக்கிறார், அவர் சொன்னதை நிச்சயம் செய்வார். நான் விஜய்க்குத்தான் கண்டிப்பாக ஓட்டு போடுவேன். எங்கள் வீட்டில் 9 ஓட்டு இருக்கு. அவங்க எல்லாரும் விஜய்க்கு ஓட்டு போடுவாங்க. இல்லன்னா, அவங்களுக்கு சோற்றுல விஷம்தான்!
விஜய் அண்ணா தேர்தலில் வெற்றி பெற்றால் முருகனுக்கு மாலை அணிந்து வருவதாக வேண்டியிருக்கிறேன். இவ்வாறு அந்த பெண் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் விஜயமங்கலம் அருகே சரளையில் தவெக பொதுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார். இதற்காக விஜய் சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து காரில் ஈரோடு விஜயமங்கலத்தை விஜய் வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அவர் வந்ததும் மங்களகரமான மஞ்சள் குறித்து பேசி தனது உரையை தொடங்கினார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக அவர் பேசியிருந்தார். விஜய்க்கு செங்கோட்டையன் வெள்ளி செங்கோல் வழங்கினார். பிறகு ஈரோடு மக்களுடன் ஒரு செல்பி எடுத்துக் கொண்டுவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications