அழாதீங்க.. கதறாதீங்க.. மண்டையில் உள்ள கொண்டையை மறைங்க சார்! திமுக - அதிமுகவை சீண்டிய விஜய்
ஈரோடு: ஈரோடு விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் விஜய் பேசினார். அப்போது அவர், ‛‛பெரியாரிடம் இருந்து எங்களுக்கு தேவையான கொள்கைகளை எடுத்து கொண்டோம். அவரை பாலோ செய்த, வழிக்காட்டியாக ஏற்றுக்கொண்ட அண்ணா, எம்ஜிஆரிடம் இருந்து தேர்தல் அணுகுமுறையை எடுத்து கொண்டோம். அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் எல்லாம் சொல்ல முடியாது. உங்களுக்கு தான் தவெக ஒரு பொருட்டே இல்லையே தானே. அப்புறம் ஏன் கதறுதீங்க. அப்புறம் ஏன் ஆள் ஆளுக்கு புலம்பி தள்ளுறீங்க. முதலில் மண்டையில் உள்ள கொண்டையை மறைங்க சார்'' என்று திமுக, அதிமுகவை சீண்டி பேசினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இந்த மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இங்கு தான் நம்மை கொள்கை தலைவர் தந்தை பெரியார் பிறந்தார். 100 வருடத்துக்கு முன்பே வகுப்புவாத பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்டவர். அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி, ஆச்சரியத்துடன் பார்க்க கூடிய தலைவர். நம்முடைய கொள்கை தலைவர். அப்போது அண்ணாவும், எம்ஜிஆரும் யாரு? பெரியாரிடம் இருந்து எங்களுக்குதேவையான கொள்கைகளை எடுத்து கொண்டோம். அவரை பாலோ செய்த, வழிக்காட்டியாக ஏற்றுக்கொண்ட அண்ணா, எம்ஜிஆரிடம் இருந்து தேர்தல் அணுகுமுறையை எடுத்து கொண்டோம். அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் எல்லாம்சொல்ல முடியாது.
அண்ணா எங்களுடையவர். எம்ஜிஆர் எங்களுடையவர். நீங்கள் எல்லாம் கூறமுடியாது என்று சொல்லிப்புட்டேன். நாங்கள் ஒரு வழியில் அரசியல் செய்து கொண்டு போய் இருக்கிறோம். உங்களுக்கு தான் தவெக ஒரு பொருட்டே இல்லையே தானே. அப்புறம் ஏன் கதறுதீங்க. அப்புறம் ஏன் ஆள் ஆளுக்கு புலம்பி தள்ளுறீங்க. இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்லை.
எங்களுக்கு பயம் இல்லை அப்படினு சத்தமாக சவுண்ட் விட்டு கொண்டு, சத்தமாக பாட்டு பாடிக்கொண்டு நடுங்கிகொண்டே சின்னபசங்க நடந்து போகிறது போல் உள்ளது. முதலில் மண்டையில் உள்ள கொண்டையை மறைங்க சார். சும்மா மறு வைச்சிக்கிட்டு மீடியா ஆளு, ரேடியோ ஆளுனு.. ஒரே ஆளை மாற்றி மாற்றி அனுப்பிகிட்டு இருக்காங்க. இதுவெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா.. உங்களுக்கு கொள்ளையடித்து வைத்திருக்கும் காசு தான் துணை. ஆனால் எனக்கு எல்லையற்ற பாசம் வைத்திருக்கும் இந்த மாஸ் தான் துணை'' என்று பேசினார்.












Click it and Unblock the Notifications