"டெபாசிட்டே வாங்க விடாதீங்க".. ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு.. "ஆபரேஷன் 70".. என்னது.. அந்த கட்சியா?
கொங்கு மண்டலம் குறித்த கனவு எடப்பாடிக்கு வரக்கூடாது என திமுக அமைச்சர்கள், தேர்தல் பணிக்குழுவில் உள்ள நிர்வாகிகளிடம் சொல்லி வருகிறார்கள்.
ஈரோடு: ஈரோடு கிழக்கில் திமுக காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு எந்த பங்கமும் இல்லையென்றாலும், பதிவாகும் வாக்குகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்று திமுக முடிவு செய்துள்ளதாம்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் பிப்ரவரி 27ம் தேதி இங்கே இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 3ம் தேதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போது காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நிற்க வைக்கப்பட்டு உள்ளார். காங்கிரசில் உட்கட்சி பூசல் நிலவுவதால், முழுமையாக அவர்களை நம்பி இருக்க கூடாது என்பதற்காக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக தீவிரமாக பணியாற்ற தொடங்கி உள்ளது.

இடைத்தேர்தல்
இடைத்தேர்தல்தான் என்றாலும் கூட பெரிய அணியையே இறக்கி இங்கே தேர்தல் பணிகளை திமுக செய்ய தொடங்கி உள்ளது. இதற்காக அமைச்சர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவையும் திமுக நியமனம் செய்துள்ளது. கே.என். நேரு தலைமையில்தான் இங்கே தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், அர. சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி. செந்தில் பாலாஜி, ஆவடி சா.மு. நாசர், கயல்விழி செல்வராஜ், ஆகியோரும் இங்கே தேர்தல் பணிகளை செய்ய தொடங்கி உள்ளனர். மொத்தமாக பெரிய அமைச்சர்கள் அணியையே இங்கே திமுக களமிறக்க காரணம் இந்த தேர்தலை அந்த அளவிற்கு திமுக சீரியஸாக கருதுகிறது என்பதுதான்.

சிக்கல் இல்லை
ஈரோடு கிழக்கில் திமுக காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு எந்த பங்கமும் இல்லையென்றாலும், பதிவாகும் வாக்குகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என்று திமுக முடிவு செய்துள்ளதாம். முக்கியமாக எதிர்த்துப் போட்டியிடுகிற அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்பதுதான் திமுக தலைமையின் உத்தரவு. அதற்கேற்ப அமைச்சர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்தப்படி பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, எடப்பாடியின் வேட்பாளரை டெபாசிட் இழக்க வைத்து, கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்து, இனி கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை என நிரூபிப்பதே அறிவாலயத்தின் ஆகப் பெரிய வியூகமாக இருக்கிறது.

கொங்கு மண்டலம்
இந்த இடைத்தேர்தலோடு, கொங்கு மண்டலம் குறித்த கனவு எடப்பாடிக்கு வரக்கூடாது என திமுக அமைச்சர்கள், தேர்தல் பணிக்குழுவில் உள்ள நிர்வாகிகளிடம் சொல்லி வருகிறார்கள். குறிப்பாக செந்தில் பாலாஜி இதனை கடுமையாக வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் தரப்பிலும் பல ஆலோசனைகள் நடந்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்ட திமுகவினர், தினமும் இரவு நேரங்களில், ஒன்று கூடி விவாதிக்கிறார்கள். பகலில் பிரச்சாரம் முடித்துவிட்டு இரவு நேரத்தில் தீவிரமாக ஆலோசனைகளை செய்து வருகின்றனராம்.

ஆலோசனை
அந்த ஆலோசனையில் , '' அதிமுகவில் எடப்பாடி அணி போட்டியிடுவது உறுதி, அதேபோல ஓபிஎஸ் அணியும் போட்டியிடும், பாஜகவும் வேட்பாளரை இறக்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது , தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. கட்சிகளும் போட்டியிடுகின்றன. இப்படி பலரும் போட்டியிடும் போது, அவர்களை டெபாசிட் இழக்க வைக்க முடியும் என்றாலும், தலைவர் (ஸ்டாலின்) எதிர்பார்க்கிற 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் வாங்க முடியுமா? போட்டியிடுகிற எல்லா கட்சிகளும் கனிசமான வாக்குகளை பிரித்தால் 70 சதவீதம் திமுக கூட்டணிக்கு எப்படி கிடைக்கும்? அதுதான் யோசனையாக இருக்கிறது. அதனால், அ.ம.மு.க., தே.மு.தி.க. , நாம் தமிழர் கட்சிகளை வாபஸ் பெற வைக்க அமைச்சர்கள் முயற்சிக்க வேண்டும்'' என்றெல்லாம் விவாதித்தபடியே, இதனை கே.என்.நேருவின் கவனத்துக் கொண்டு சென்றுள்ளனர் ஈரோடு மாவட்ட திமுகவினர்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications