Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஊரு விட்டு ஊரு பிழைக்க வந்த நாய்.." வட மாநில இளைஞரை தாக்கிய காவலர்.. ஈரோட்டில் ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: இரவு நேரத்தில் உணவகத்தைத் திறந்து வைத்திருந்ததால் அங்கிருந்த பொருட்களைக் காவலர் கீழே தள்ளிவிட்டுள்ளார். மேலும், இது குறித்து கேள்வி எழுப்பிய வட மாநில இளைஞரைத் தகாத வார்த்தைகளால் திட்டிய காவலர், "ஊரு விட்டு ஊரு பிழைக்க வந்த நாய்" என்றும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

வட மாநிலங்களில் இருந்து பலரும் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வருகிறார்கள். பெரும்பாலும் அவர்களுக்குத் தமிழகத்தில் எந்தவொரு சிக்கலும் ஏற்படுவதில்லை. ஆனால், சில நேரங்களில் மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஈரோட்டில் நடந்துள்ளது.

North Indian attack in Erode

என்ன நடந்தது!

ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியில் காவலர் ஒருவர் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பகுதியில் 10 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் நிலையில், குறிப்பிட்ட துரித உணவகக் கடை மட்டும் 10 மணியைத் தாண்டிக் கூடுதலாக 20 நிமிடங்கள் திறந்து இருந்துள்ளது. கடையில் சிலர் சாப்பிட்டுக் கொண்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த அந்தக் காவலர் உடனடியாகக் கடையை மூடுமாறு அந்த வடமாநில ஊழியர்களிடம் கூறியிருக்கிறார். இருப்பினும், கடையின் உரிமையாளர் வெளியே சென்றுள்ளதாலேயே கடையை மூட தாமதம் ஆனதாக அந்த வட மாநில ஊழியர் சொல்லி இருக்கிறார். மேலும், சிலர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதால் அவர்கள் சாப்பிட்ட உடன் கடையை மூடிவிடுவதாகச் சொல்லி இருக்கிறார்.

கடையை மூட வலியுறுத்திய காவலர்

இதை ஏற்க மறுத்த அந்தக் காவலர், உடனடியாகக் கடையை மூடுமாறு சொல்லி இருக்கிறார். மேலும், அங்கிருந்த பொருட்களைக் காவலர் அங்கிருக்கும் பொருட்களைத் தனது கையில் இருந்த லத்தியால் தள்ளிவிட்டுள்ளார். கடையை 10 மணிக்கு மூட வேண்டும் என ஏற்கவே சொல்லிய பிறகும் கடையை எப்படித் திறந்து வைக்கலாம் எனக் கேட்டுக் கத்தியுள்ளார். மேலும், உணவுப் பொருட்களையும் தள்ளிவிட்டுள்ளார். உடனடியாக விளக்கை ஆஃப் செய்யச் சொல்லி, சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களையும் வெளியே அனுப்பியுள்ளார்.

ஊரு விட்டு ஊரு பிழைக்க வந்த நாய்

அப்போது அங்கு வேலை செய்து கொண்டு இருந்த ஒரு இளைஞர், பொருட்களைத் தள்ளிவிட வேண்டாம் எனச் சொல்லியுள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த காவலர், அவரை தள்ளிவிட்டு இருக்கிறார். 10 மணிக்கு மேல் கடையைத் திறக்கக்கூடாது எனச் சொல்லித் தாக்கியதாகவும் தெரிகிறது. அங்கிருந்து கிளம்பும்போது, "எந்த ஊரு டா நீ.. ஊரு விட்டு ஊரு பிழைக்க வந்த நாய்" என்று தரக்குறைவாகப் பேசியுள்ளார். மேலும், ஆபாச வார்த்தைகளால் திட்டிய அவர், எப்படிக் கடையை நடத்துகிறாய் என பார்க்கலாம் என்றும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

குவியும் கண்டனம்

இவை அனைத்துமே கடையில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் காவலர் செயலைக் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்தது தவறு தான் என்றாலும் அதற்காக உணவுப் பொருட்களைக் கீழே தள்ளிவிடுவதில் என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், தங்கள் ஊரில் பிழைப்பிற்கு வழியில்லாமலேயே வடமாநில இளைஞர்கள் இங்கு வந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை இப்படித் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசுவதில் துளியும் நியாயம் இல்லை என்றும் சாடி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து சம்பந்தப்பட்டக் காவலர் மோகன் குமார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+