டாஸ்மாக்கில் விரைவில் ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும் வசதி:அமைச்சர் முத்துசாமி கொடுத்த மேஜர் அப்டேட்
ஈரோடு: டாஸ்மாக் கடைகளில் விரைவில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மூத்த அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கப்பட்டது. அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் விவகாரத்தில் உள்ள பல்வேறு சிக்கல்களையும் குறைபாடுகளையும் களைவதற்கும் முனைப்பு காட்டி வருகிறார். குறிப்பாக டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணப்படும் என்று கூறினார்.

டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், மது விற்பனையில் நிர்வாகத்தின் மீது வரும் புகார்கள் உள்ளிட்டவைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சர் முத்துசாமி அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக ஆலோசித்து வருகிறார். விரைவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இது தொடர்பாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுக்கடைகளில் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:- டாஸ்மாக் மதுபான கடைகளில் மாற்றங்களை கொண்டு வர 2 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. முதல் கட்டமாக தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

18 தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் வசதியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், இந்த வசதியை அமல்படுத்த தொழில் நுட்ப கருவிகள் வாங்க வேண்டியிருக்கிறது. இதனால், கால அவகாசம் தேவைப்படுகிறது" என்றார். டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு ரூ.10 வாங்கப்படுவதாக பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்து உள்ள சூழலிலும், இன்னும் கூட சில இடங்களில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுவது நீடிப்பதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழாமல் இல்லை. எனவே, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வந்தால் இதுபோன்ற சிக்கல்களுக்கு பெருமளவு தீர்வு காணப்படும் என தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications