ஆஹா.. மேலிடத்தோடு தொடர்பாமே? எடப்பாடி வகுக்கும் "சைலண்ட்" வியூகம்.. அப்போ ஓபிஎஸ்.. போச்சா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். நாம்தான் கட்சி என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். எடப்பாடியை வழிக்கு கொண்டு வரும் ஒரே சக்தி பாஜகவிற்கு மட்டும்தான் உள்ளது, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம், என்றுள்ளார். இது அதிமுகவில் பெரிய மோதலை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி ஒருங்கிணைய ஓ பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு

ஈரோடு

இந்த தேர்தல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். நாம்தான் கட்சி என்ற நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். எடப்பாடியை வழிக்கு கொண்டு வரும் ஒரே சக்தி பாஜகவிற்கு மட்டும்தான் உள்ளது. எடப்பாடியை பாஜக மட்டுமே கட்டுப்படுத்த முடியும். பாஜகவை எதிர்க்கும் முழு துணிச்சல் எடப்பாடிக்கு வந்துவிட்டதாக நான் கருதவில்லை. பாஜகவை எந்த கட்டத்திலும் நாங்கள் எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டை இன்னும் எடப்பாடி எடுக்கவில்லை. எடப்பாடி வெளியேதான் பாஜகவை எதிர்ப்பது போல எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்.

உண்மை

உண்மை

ஆனால் உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் பாஜக மேலிடத்திடம் கூட எடப்பாடி தொடர்பில்தான் இருக்கிறார். யார் யார் முக்கியமான ஆட்களோ அவர்களுடன் தொடர்பில்தான் இருக்கிறார். வெளியில்தான் இதை எடப்பாடி காட்டிக்கொள்வது இல்லை. இப்போது இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கிறோம். இடைத்தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் மோடிக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறி எடப்பாடி பாஜக மேலிடத்திற்கு சமாதானம் சொல்லிவிட்டு, இந்த முறை ஈரோடு கிழக்கில் தனித்து நிற்கவும் வாய்ப்புகள் உள்ளன.

எடப்பாடி - ஓபிஎஸ்

எடப்பாடி - ஓபிஎஸ்

இப்போதைக்கு எடப்பாடி - ஓபிஎஸ் இணைந்து இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை காரணம் காட்டி ஓபிஎஸ் - எடப்பாடியை இணைக்க பாஜக நினைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த இடைத்தேர்தலில் ஒருவேளை எடப்பாடி, ஓபிஎஸ் இரண்டு தரப்பும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டால், பாஜக அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் என்று நினைக்கிறேன். பாஜக போட்டியிடாமல் இவர்கள் இருவரையும் வேடிக்கை பார்க்கும்.

 வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

நீங்கள் இரண்டு பேரும் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று பாஜக சொல்லும். அல்லது இரட்டை இலை சின்னத்தை கொண்டவருக்கு ஆதரவு கொடுப்போம் என்ற நிலைப்பாட்டை பாஜக எடுக்கும். ஒருவேளை எடப்பாடி, ஓபிஎஸ் இரண்டு தரப்பும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டால், பாஜக அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் என்று நினைக்கிறேன். பாஜக போட்டியிடாமல் இவர்கள் இருவரையும் வேடிக்கை பார்க்கும். இல்லையென்றால் இரண்டு பேருக்குமே சுயேச்சை தானே நீங்கள் போட்டியிட வேண்டாம் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று பாஜக சொல்ல வாய்ப்புகள் உள்ளன.

தினகரன்

தினகரன்

இன்னொரு பக்கம் தினகரன் எடப்பாடி அதிமுக எதிர்த்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எல்லாம் பாஜக கையில்தான். பாஜக சொல்வதுதான். பாஜக எடுக்கும் முடிவுதான் இதில் இறுதி. அதனால்தான் எல்லோரும் பாஜக அலுவலகங்களுக்கு செல்கிறார்கள். பாஜக என்ன சொல்கிறார்கள் என்பது இப்போது முக்கியத்துவம் பெறுகிறது. அதிமுக பொதுக்குழு தீர்ப்பு எப்படியும் விரைவில் வந்துவிடும். 1 வாரம், 10 நாட்களில் தீர்ப்பு வந்துவிடும். தீர்ப்பு வந்தாலும் தேர்தல் ஆணையம் உடனே முடிவு எடுக்காது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் முடிவை எடுக்க கொஞ்சம் யோசிக்கும். டெல்லி பாஜகவிற்கு 2024தான் முக்கியம். 2024ல் ஒருங்கிணைந்த அதிமுகதான் தேவை. அப்போதுதான் பாஜக லோக்சபா தேர்தலில் வெல்ல முடியும். அதற்கான வேலைகளை பாஜக பார்க்கும். இடையில் இந்த இடைத்தேர்தல் என்பது ஒரு ட்ரையல்தான். அதிமுகவில் சமரசத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அது பாஜகவால மட்டுமே முடியும். ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் vs பாஜக என்ற நிலையை கொண்டு வர வேண்டும் என்று பாஜக நினைப்பதாக நான் நினைக்கிறேன். இதற்கு ஓபிஎஸ் ஆதரவு தருகிறார். ஆனால் எடப்பாடி இன்னும் ஆதரவு தரவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+