10 வருஷமா குழந்தை இல்லை.. நான் தரேன்.. சொத்தும் தர்றேன்.. டார்ச்சர் மாமனார்.. மருமகள் பரபர புகார்
ஈரோடு: மருமகள் கண்முன்னே நிர்வாணமாக நின்ற மாமனார், அவரிடம் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் சொத்தை தருகிறேன் என கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டி வடக்கு தோட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மனைவி பிரியா. இவருக்கு 42 வயதாகிறது. இவர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு 2011 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதுவரை எங்களுக்கு குழந்தைகள் இல்லை.

2011 இல் திருமணம்
கடந்த மாதம் 13 ஆம் தேதி நானும் எனது கணவரும் கதிரம்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்றோம். அப்போது அங்கு மாமனார் ரங்கசாமி, மாமியார் செல்லம்மாள் ஆகியோர் எனக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தை சொல்லி என்னை கடுமையாக தாக்கினர். இதற்கு அடுத்த நாளே நான் வீட்டில் இருந்த போது அரைநிர்வாணத்தில் எனது மாமனார் என்னிடம் வந்தார்.

கையை பிடித்து இழுத்த மாமனார்
அவர் என் கையை பிடித்து இழுத்து "குழந்தை இல்லாமல் எதற்காக கஷ்டப்படுகிறாய். தினந்தோறும் அடி வாங்குகிறாய். என்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டு சந்தோஷப்படுத்து உனக்கு ஒரு குழந்தை தருகிறேன். வேண்டுமானால் சொத்தையும் தருகிறேன்" என்று அசிங்கமாக பேசினார். இவ்வாறு அந்த புகாரில் பிரியா தெரிவித்துள்ளார். தகப்பன் ஸ்தானத்தில் இருக்க வேண்டியவரே இவ்வாறு பேசியது பிரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமியார் கண்டுகொள்ளவில்லை
இந்த காட்சிகளை எல்லாம் எனது மாமியாரும் பார்த்துக் கொண்டு கண்டும் காணாதது போல் இருந்தார். எனது கணவருக்கு போன் போட்டு நடந்தவற்றை கூறினேன். அவர் எனது மாமனாரை கண்டித்தார். அவரையும் எனது மாமனார் மிரட்டினார். எனது மாமனார் அரைகுறை ஆடையில் என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதையும் எனது கணவரை மிரட்டியதையும் வீடியோவாக எடுத்துள்ளேன்.

மாமனார் மீது வழக்குப் பதிவு
எனவே எனக்கு பாலியல் தொல்லை தரும் எனது மாமனார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறியுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் ஈரோடு மகளிர் போலீஸார், பிரியாவின் மாமனார் ரங்கசாமி, மாமியார் செல்லம்மாள் ஆகியோர் மீது பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை செய்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications