12-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.. ஈரோட்டில் போலீஸ் குவிப்பு.. பெரும் பதற்றம்
ஈரோடு மூலக்கரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு: ஈரோடு மூலக்கரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது.
இதனால் தற்போது கொங்கு மாவட்டங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. தங்கள் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

அருகிலும் பரவியது
சேலத்தில் மட்டும் நடந்து வந்த போராட்டம் திருவண்ணாமலை, திருப்பூர், கோவை என்று அருகருகே இருக்கும் மாவட்டங்களுக்கும் பரவியது. ஈரோடு மாவட்ட விவசாயிகளும் அதன்பின் போராட்டத்தில் குதித்தனர். இதனால் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வித்தியாசம்
விவசாயிகள் தினமும் வித்தியாசமான போராட்டம் நடத்தி வருகிறார்கள். குழிக்குள் இறங்கி மண்ணை மூடி போராடுவது, தண்ணீரில் இறங்கி போராடுவது, ஒப்பாரி வைத்து போராடுவது என்று வித்தியாசமாக போராடி வருகிறார்கள். விவசாயிகள் தூக்கு கயிற்றை கழுத்தில் போட்டும், வாயில் கருப்பு துணி கட்டியும் வித்தியாசமாக போராடினார்கள்.

உண்ணாவிரத போராட்டம்
அதேபோல் சில விவசாயிகள் கடந்த 23-ந்தேதியில் இருந்து உண்ணாவிரதம் செய்து வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து விவசாயிகள் 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் ஈரோடு மூலக்கரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. 100க்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வருவோரை தடுக்கும் வகையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications