இதென்ன புதுசா இருக்கே! ஈரோடு தவெக கூட்டத்தில் மரத்திற்கு மரம் போலீஸ் பாதுகாப்பு!
ஈரோடு: தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்கள் மரத்தில் ஏறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் மரத்திற்கு மரம் பாதுகாப்பு அளித்துள்ளனர். எப்போதும் இல்லாத அளவுக்கு இது போன்ற பாதுகாப்புகள் கொடுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 80 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் தனது பிரச்சாரங்களை தொடங்கியுள்ளார்.

நடுவே கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து சிறிது நாட்கள் பிரச்சாரம் செய்யாமல் இருந்த விஜய், அண்மையில் புதுவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விஜய் பங்கேற்றிருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது ஈரோட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்காக விஜய் சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக அவர் ஈரோட்டிற்கு செல்கிறார்.
அவரது காரை யாரும் பின்தொடர கூடாது என போலீஸார் நிபந்தனை விதித்தும், யாரும் கேட்டபாடில்லை, இத்தனைக்கு நாங்கள் விதிகளை மீற மாட்டோம் என பிரமாண பத்திரத்தை வேறு தவெகவினர் எழுதி சத்தியம் செய்து கொடுத்துள்ளனர்.
ஆனால் கோவையிலிருந்து விஜய்யின் காரை தொண்டர்களும் இளைஞர்களும் துரத்திக் கொண்டே வருகிறார்கள். இதனால் அந்த சாலை மார்க்கமாக செல்லும் பொதுமக்களுக்கு பாதிப்பாக இருக்கிறது.
மரத்திற்கு மரம் போலீசார் பாதுகாப்பு
— Veerakumar (@Veeru_Journo) December 18, 2025
தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்கள் மரத்தில் ஏறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் மரத்திற்கு மரம் பாதுகாப்பு அளித்துள்ளனர் @thatsTamil #TVKVijay #Erode pic.twitter.com/cfUNImZRX9
மேலும் இந்த கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிந்துள்ளனர். அது போல் டிரோன் கேமராக்கள், சிசிடிவி கேமராக்கள் என தவெக சார்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக விஜய்யை பார்க்க விளம்பர பதாகைகள், மரங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவைகளில் இளைஞர்கள் ஏறி நிற்க கூடும். இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது.
அந்த வகையில் அவர்கள் மரங்களின் மேல் ஏறக் கூடாது என்பதற்காக மரத்திற்கு மரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications