தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி பிப். இறுதியில் அறிவிக்க வாய்ப்பு?
டெல்லி: தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான சட்டசபை தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
தமிழகத்தில் வரும் மே மாதம் 24 ஆம் தேதியுடன் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அது போல் புதுவை, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகியவற்றுக்கான சட்டசபை பதவிக்காலமும் விரைவில் முடிவடைகிறது.
இதனால் இந்த 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக இந்த 5 மாநிலங்களிலும் 2021-ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தல் ஆணையம்
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை தயார் செய்வது, கூடுதல் வாக்குச் சாவடிகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளிலும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு கடந்த டிசம்பர் மாதம் சென்னை வந்தது.

சுனில் அரோரா
பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள் பங்கேற்றன. ஒவ்வொரு கட்சியினரிடமும் தமிழக சட்டசபை தேர்தலை எப்படி நடத்தலாம் என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு சென்னை வந்துள்ளனர்.

ஹோட்டல்
இவர்கள் தற்போது கிண்டியில் உள்ள ஹோட்டலில் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்கள். மேற்கண்ட 5 மாநிலங்களிலும் இந்த அதிகாரிகள் 6 நாட்கள் இருந்து தேர்தல் குறித்த ஆலோசனைகளை நடத்துகிறார்கள். இந்த ஆலோசனைகளில் கருத்தொற்றுமை ஏற்படும் பட்சத்தில் தேர்தல் நடத்துவதற்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

பிப் இறுதியில் அறிவிப்பு
அது போல் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே 5 ஆம் தேதிக்குள்ளோ தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கடந்த 2016 சட்டசபை தேர்தலை காட்டிலும் இந்த முறை முன் கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
-
சென்னை பெருங்குடி ஹாஸ்டலில் குளித்த 29 வயது பெண்.. மறைந்திருந்த இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications