“இட்ஸ் வெரி ராங் ப்ரோ..” விஜய் வருகையையொட்டி.. ஈரோட்டில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களால் சலசலப்பு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் விஜய் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இன்று ஈரோட்டில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை பிரச்சாரம் நடக்கிறது. இதற்காக தற்போது சென்னையிலிருந்து விஜய் கிளம்பியுள்ளார். மறுபுறம் விஜய்யின் வருகையை ஒட்டி ஈரோட்டில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் விவாதங்களை கிளப்பியுள்ளன.

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கரூரில் கடந்த செப்.27ம் தேதி விஜய் மேற்கொண்டிருந்த பிரச்சார பயணம் சோகத்தில் முடிந்தது.

Vijay TVK

நாமக்கல்லில் அசம்பாவிதம்

அன்றைய தினம் விஜய் நாமக்கல் மற்றும் கரூர் என இரண்டு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். நாமக்கல்லில் பெரும் அசம்பாவிதம் நடப்பதற்கான சூழல்கள் வெளிப்படையாகவே தெரிந்தன. நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கு விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் 8.50க்குதான் திருச்சிக்கே வந்து சேர்ந்திருந்தார். அங்கிருந்துதான் அனுமதி பெறாத சாலை பயணம் தொடங்கியது.

நெரிசலில் பெண்கள், குழந்தைகள்

கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், விஜய்யிடம் தங்களின் முகங்களை பதிய வைக்க விமான நிலையத்திலிருந்து விஜய்யை பின்தொடர்ந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த யாரும் இல்லாததால் தாகம், பசி காரணமாக தொண்டர்கள் சோர்வடைய தொடங்கினர். ஓரிரு இடங்களில் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. அங்கும் நெரிசல் அதிகமாக இருந்ததால், பெண்களும், குழந்தைகளும் தண்ணீர் வாங்காமல் ஒதுங்கியே நின்றனர்.

கரூர் துயரம்

இதனால் சிலர் மயக்கமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அக்கம் பக்கத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த அவர்கள், விஜய் போய்விட்டாரா என்று கேட்டு, குளுக்கோஸ் ஊசியை கழற்றி வீசி எறிந்துவிட்டு கூட்டத்தை நோக்கி ஓடினார்கள் என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறியிருந்தார். இது வெறும் டிரெய்லர்தான். கரூரில்தான் அந்த கோர சம்பவம் நடந்தது.

கலையாத கூட்டம்

கரூரில் மதியம் 3 மணிக்கு விஜய் பேசுவார் என்பதுதான் பிளான். ஆனால் விஜய் இரவு 7.50க்குதான் கரூருக்கு வந்திருந்தார். விஜய்யை பார்க்க காலை 11 மணி முதல் மக்கள் கூட்டம் முந்தியடித்துக்கொண்டிருந்தது. அவர்கள் சோறு தண்ணீர் இல்லாமல் விஜய்யை பார்க்க காத்திருந்தார்கள். ஒருவேளை விஜய் மதியம் 3 மணிக்கு வந்திருந்தால் கூட, அவரை பார்த்துவிட்டு 4 மணிக்கு கூட்டம் கொஞ்சமாக கலைந்திருக்கலாம். ஆனால், விஜய் இப்போ வருவார், இதோ வந்துவிட்டார் என்று நிர்வாகிகள் கூட்டத்தை கலையாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

நீண்ட நேரம் நின்றுக்கொண்டிருந்ததால் ஏற்பட்ட சோர்வு, பசி, தாகம் இதெல்லாம் சேர்ந்து நெரிசல் பலிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விவாதத்தை கிளப்பிய போஸ்டர்கள்

இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய்க்கு பிரச்சாரம் மேற்கொள்ள எளிதில் அனுமதி வழங்கப்படவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இன்று ஈரோட்டில் பரப்புரை மேற்கொள்கிறார்.

விஜய் ஈரோடு வரும் நிலையில், ஈரோட்டை சுற்றி ஒட்டப்பட்டிருக்கும் சில போஸ்டர்கள் கவனத்தை விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, "ஈரோடு வரைக்கும் வந்தீங்களே! கரூருக்கு போகமாட்டீங்களா?" என்றும் "இங்கு இருக்கும் கரூருக்கு போகல.. ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க? what bro it's very wrong bro" என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+