இதான் கிரவுண்ட் ரிப்போர்ட்.. எடப்பாடிக்கு வார்னிங் தந்த "எக்ஸ்பர்ட்".. அப்போ இடைத்தேர்தல்? அச்சச்சோ
ஈரோடு: ஈரோடு கிழக்கில் எடப்பாடி தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்தினார் என்றால் ஓ பன்னீர்செல்வம் போட்டிக்கு இன்னொரு வேட்பாளரை நிறுத்துவார், இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய பின்னடைவை கொடுக்கும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்து விட்டார்.
இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக என்ன செய்யும்? ஒருங்கிணைத்த அதிமுகவாக போட்டியிடுமா? எடப்பாடி பழனிசாமியின் அதிமுக தனியாக போட்டியிடுமா? பாஜகவுடன் கூட்டணி வைக்குமா? கூட்டணி வைத்தால் எந்த கட்சியின் வேட்பாளர் களமிறக்கப்படுவார்? ஓபிஎஸ் - எடப்பாடி சண்டையால் இரட்டை இலை சின்னம் முடங்குமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்துள்ளன. அதோடு திமுக என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விரைவில் இங்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பிளான் என்ன என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி அளித்துள்ள பேட்டியில், ஈரோடு இடைத்தேர்தல் மட்டுமின்றி பொதுத்தேர்தலில் பாஜகவை தள்ளிவிட எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்திக்கொண்டு இருக்கிறார். தன்னையும் பன்னீர்செல்வத்தையும் பாஜக சமமாக நடத்துவதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. பாஜகவுடன் இருந்தால் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்று நினைக்கிறார் எடப்பாடி. 2021ல் ஸ்டாலின் வென்றது போல மீண்டும் வென்றுவிடுவார் என்று எடப்பாடி நினைக்கிறார். இதனால் பாஜகவை எப்படியாவது கழற்றிவிட எடப்பாடி திட்டமிடுகிறார். எடப்பாடி இதனால் பல குழப்பத்தில் இருக்கிறார்.

பொதுக்குழு வழக்கு
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்படி வருகிறது என்று பார்ப்போம். அதிமுகவில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தினகரன் உட்பட எல்லோரும் இருக்க வேண்டும். கமல்ஹாசனை சேர்த்துக்கொண்டால், அதோடு ஆட்சிக்கு எதிராகவும் மக்கள் மனநிலை இருந்தால் வேண்டுமானால் 15 இடங்களை எடப்பாடி வெல்ல முடியும். ஆனால் இந்த கணக்கை எடப்பாடி காலி செய்துவிட்டார். இந்த கணக்கை காலி செய்துவிட்டு பன்னீரை எடப்பாடி நீக்கி உள்ளார். இது எடப்பாடிக்குத்தான் சிக்கலாக முடியும்.

எடப்பாடிக்குத்தான் சிக்கலாக
ஈரோடு கிழக்கில் எடப்பாடி தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்தினார் என்றால் ஓ பன்னீர்செல்வம் போட்டிக்கு இன்னொரு வேட்பாளரை நிறுத்துவார். முதலியார் வேட்பாளரை நிறுத்துவார் . ஈரோடு கிழக்கில் இதனால் எடப்பாடிக்கு எதிராக நிலைமை மாறும் வாய்ப்புகள் உள்ளன. ஈரோடு கிழக்கில் மட்டும் எடப்பாடிக்கு ஓபிஎஸ் செக் வைத்தார் என்றால், அது எடப்பாடிக்கு பெரிய பாதிப்பாக அமையும். இந்த ஒரு தேர்தலை வைத்து நான் இல்லாமல் நீங்கள் வெல்ல முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் நிரூபிக்க முடியும், தனக்கு எல்லா மாவட்டங்களிலும் சப்போர்ட் இருக்கிறது என்று ஓபிஎஸ் சொல்லும் சூழ்நிலையை இது உருவாக்கிவிடும்.

ஈரோடு கிழக்கு
பன்னீர்செல்வம் தனியாக நின்று ஸ்டாலினை எதிர்க்க முடியாது. அப்படி செய்தால் வெள்ளாள கவுண்டர்கள் இல்லாதோர் வாக்குகள் எடப்பாடிக்கு கொங்கில் கிடைக்காது. முக்குலத்தோர் வாக்கும் தெற்கில் கிடைக்காது. எடப்பாடி நினைத்தால் நிற்கலாம். ஆனால் அது எடப்பாடிக்கு தோல்வியை கொடுக்கும். ஸ்டாலினுக்கு வெற்றியை கொடுக்கும். இதனால்தான் அதிமுகவில் இருப்பவர்கள் சிலரே ஓ பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். 38 தொகுதியில் அதிமுக தோற்ற போது கூட பன்னீர்செல்வம் தனது மகனை வெற்றிபெற வைத்தார்.

ஸ்டாலினை எதிர்க்க முடியாது
அப்படி என்றால் அவருக்கு ஆதரவு இருக்கிறது என்று தானே அர்த்தம். இதில் எடப்பாடி அவசரப்பட கூடாது. யதார்த்தத்தை எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும். தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாகவே வந்தால் கூட ஈரோடு கிழக்கில் எடப்பாடிக்கு சிக்கல்தான். இரட்டை இலை எடப்பாடிக்கு வர வாய்ப்பு இல்லை. வந்தாலும் அவருக்கு சிக்கல்தான். இரட்டை இலையே தோல்வி அடைந்த சின்னம்தான். ஜெயலலிதாவே இந்த சின்னத்தில் தோல்வி அடைந்தார் என்பதை மறக்க கூடாது. எனவே சின்னம் கிடைத்தால் மட்டும் எடப்பாடி வென்றுவிடுவார் என்று சொல்லி விட முடியாது.

யதார்த்தம்
எடப்பாடிக்கு இருக்கும் ஆதரவு 15 சதவிகிதம். இதை நான் கிரவுண்டில் இருந்து சொல்கிறேன். கிரவுண்டு ரிப்போர்ட் இதுதான் என்று நான் ஆய்வு செய்த பின்புதான் சொல்கிறேன். ஓபிஎஸ் இல்லாமல் எடப்பாடி தனியாக நிற்கும் பட்சத்தில் அவருக்கு வெள்ளாள கவுண்டர்கள் இல்லாத வாக்குகள் கிடைக்க வாய்ப்புகள் இல்லை. ஓ பன்னீர்செல்வம் வாக்குகளை பிரிப்பார். செந்தில் பாலாஜியும் திமுகவிற்காக வாக்குகளை பிரிப்பார். இதை எல்லாம் மீறி எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு தனி வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறுவது என்பது கடினம் , என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்!











Click it and Unblock the Notifications