Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘டபுள்’.. வாக்கு வங்கியை உயர்த்திய நாம் தமிழர் கட்சி.. ஈரோடு கிழக்கில் அதிக ஓட்டு வாங்க காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. 1,14,439 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்றுள்ளார். ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி இந்த முறை தான் இவ்வளவு அதிக வாக்குகளை பெற்றுள்ளது. நாதக வாக்குகள் உயர்ந்ததற்கான காரணங்களை அலசலாம்..

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் காலமானதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 17 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

erode east by election 2025 erode east election result 2025 ntk 2025 2025

திமுக அபார வெற்றி

வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் சந்திரக்குமார், 1,14,439 வாக்குகளையும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி, 23,810 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு, 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.

இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் 11 ஆயிரம் என்ற அளவுக்கே வாக்குகளைப் பெற்றிருந்தது நாதக. ஆனால் இந்த முறை வேட்பாளர் சீதாலட்சுமி, 23 ஆயிரம் வாக்குகளைக் கடந்துள்ளார். அவர் டெபாசிட்டை இழந்திருந்தாலும், நாம் தமிழர் கட்சி இதுவரை வாங்கிய வாக்குகளை ஒப்பிடும்போது இது நல்ல வளர்ச்சிதான்.

முந்தைய தேர்தல்களில்

2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா தமாகாவின் யுவராஜாவை விட 8,904 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திருமகன் ஈ.வெ.ரா மறைவைத் தொடர்ந்து, கடந்த 2023-ல் இடைத்தேர்தல் நடந்தது.. அப்போது காங்கிரஸ் சார்பில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசுவைவிட 60 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தற்போது, திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக பெற்றுள்ள வாக்குகள் உயர்ந்ததற்கு, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்ததே காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகள் பெற காரணங்கள்

அதேசமயம், நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் அதிகரித்து உள்ளன. இதற்கான காரணங்கள் தீவிரமாக அலசப்பட்டு வருகின்றன.

1. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், பாஜக தலைமை தங்கள் கட்சியினர் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது குறித்து வெளிப்படையாக எந்த அறிவிப்பும் செய்யவில்லை. எனவே, பாஜக ஆதரவு வாக்குகள், திமுக எதிர்ப்பு மனநிலை காரணமாக நாம் தமிழர் கட்சிக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

2. அதிமுக தலைமை, நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் அதிக வாக்குகள் பெற்றால், அது அதிமுகவுக்கு பின்னடைவாக அமையும் எனக் கருதி இவ்வாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் நோட்டாவுக்கு சுமார் 5000 வாக்குகளே விழுந்துள்ளன. அதிமுகவினரில் பெரும்பாலானோரே திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் வாக்குகளை அளித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

3. ஆளுங்கட்சியான திமுக, இந்த இடைத்தேர்தலை அவ்வளவு தீவிரமாக எடுத்துப் பணியாற்றவில்லை. கடந்த முறை இடைத்தேர்தலில் திமுகவின் அத்தனை அமைச்சர்களும் ஈரோட்டில் முகாமிட்டு வாக்கு சேகரித்தனர். முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் இந்த முறை குறைந்த அளவிலான அமைச்சர்கள் மட்டுமே ஈரோடு சென்றனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஈரோட்டு பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. திமுகவின் இந்த சுணக்கமும் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளைப் பெறக் காரணம் எனக் கூறப்படுகிறது.

4. ஈரோடு கிழக்கில் முந்தைய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி 11,629 வாக்குகள், 10,827 வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறை 23,810 வாக்குகளைப் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. அதாவது சுமார் 2 மடங்கு அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தாலும் நாதக துணிந்து களமிறங்கியது, மக்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது.

5. கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டபோதும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகளைப் பெற்றார். இந்த முறை களத்தில் சூடு இல்லாததால் திமுக தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டியது. வெளியூர்களில் வசிப்பர்களை அழைத்து வரவும் திமுகவினர் ஆர்வம் காட்டவில்லை. அதன் காரணமாகவே, இப்போதும் 1 லட்சத்து 14 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது திமுக. நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கவனம் பெற்றது அக்கட்சி அதிக வாக்குகள் பெற கை கொடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+