"மிதிவண்டி வேண்டாம்.. சைக்கிள் வேண்டும்.." தமிழே தெரியாமல் ஈரோட்டில் அடம்பிடித்த சமாஜ்வாதி வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அனைத்து வேட்பாளர்களுக்கும் நேற்று சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்குச் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சமாஜ்வாதி வேட்பாளருக்குச் சின்னத்தை ஒதுக்கீடு செய்த போது, சிரிப்பலையை ஏற்படுத்தும் சம்பவமும் நடந்தது. சமாஜ்வாதி வேட்பாளர் கேட்ட கேள்வியால் அங்கு அனைவரும் ஸ்டன் ஆகிவிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் அமைதியாக இருந்த அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இடைத்தேர்தல் என்பதால் இதில் வென்றே தீர வேண்டும் என்பதில் ஆளும் தரப்பு உறுதியாக உள்ளது. அதேபோல இடைத்தேர்தலில் வென்றால் அது ஆளும் தரப்புக்கு நெருக்கடி தரும் என்று அதிமுகவும் இறங்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு
இதில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவேரா தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. அவரை வேட்பாளராக அறிவிக்கும் முன்னரே திமுக கட்சி காங்கிரஸ் கட்சிக்காகப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். முக்கிய அமைச்சர்கள் அங்குத் தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் அங்கு நேரடியாகப் பிரசாரம் செய்யவுள்ளார். திமுக, காங்கிரஸ் என்று இரு கட்சிகளுக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குத் தனித் தனியாகக் குழுக்களையும் அமைத்துள்ளன.

அதிமுக
அதிமுகவை பொறுத்தவரை இந்தத் தேர்தலில் ஆரம்பத்தில் குழப்பமே இருந்தது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என்று இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தனர். இந்த விவகாரத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வேட்பாளரைத் தேர்வு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் கூறியதை அடுத்து எடப்பாடி வேட்பாளர் தென்னரசு போட்டியிடுவது உறுதியானது. இதன் மூலம் இரட்டை இலை முடங்கும் சூழலும் தவிர்க்கப்பட்டது. இது தவிர நாம் தமிழர் கட்சியும் இதில் தனித்துக் களமிறங்குகிறது. இதில் மேனகா வேட்பாளராகக் களமிறங்குகிறார். அதேபோல தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.

களத்தில் 77 பேர்
கடந்த ஜன. 31ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், பலரும் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்புமனுவை வாபஸ் பெறும் காலஅவசாகம் நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேச்சையாகவும் பலரும் களமிறங்குகின்றனர். இதில் மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். இதற்கிடையே நேற்றைத் தினம் வேட்பாளர்களுக்குச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சின்னம் ஒதுக்கீடு
தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஈரோடு கிழக்கில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குச் சின்னங்களை ஒதுக்கீடு செய்தார். இதில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரட்டை இலை முடங்கும் சூழல் தவிர்க்கப்பட்ட நிலையில், அதிமுகவின் தென்னரசுக்கு இரட்டை இலை ஒதுக்கப்பட்டது. அதேபோல நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவுக்கு கரும்பு விவசாயி சின்னமும், தேமுதிகவுக்குக் கொட்டும் முரசு சின்னமும் ஒதுக்கப்பட்டது.

குக்கர்
இந்தத் தேர்தலில் தாங்கள் கேட்ட குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று கூறியே அமமுக வேட்பாளரை வாபஸ் பெற்றது. சின்னம் ஒதுக்கீட்டில் 4 வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தை முதலில் கோரினர். யாரும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. இதையடுத்து குலுக்கல் முறையில் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி குலுக்கல் முறையில் கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே.பி.எம்.ராஜாவுக்கு குக்கர் சின்னம் போனது. மநீம கடந்த முறை போட்டியிட்ட டார்ச் லைட் சின்னமும் சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிரிப்பலை
சின்னத்தை ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்து வந்த போது சிரிப்பலையை ஏற்படுத்தும் சம்பவமும் நடந்தது. தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு மிதிவண்டி சின்னத்தை ஒதுக்குவதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அறிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் வலுவாக உள்ள சமாஜ்வாதியின் சின்னமே மிதிவண்டி தான். இதனால் அவர் சந்தோஷமடைந்திருக்கவே வேண்டும். ஆனால், மாறாக அவர் சோகமடைந்தார்.

சீரியஸான காமெடி
அதிருப்தியுடன் எழுந்த அவர், "நான் கேட்டது சைக்கிள் சின்னம்.. எனவே, எனக்குச் சைக்கிள் சின்னம் தான் வேண்டும்.. மிதிவண்டி வேண்டாம்" என்று சீரியசாக எழுந்து கேட்க, அங்கிருந்தவர்கள் குபீர் என்று சிரித்துவிட்டார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரியே ஒரு நிமிடம் ஸ்டன் ஆகிவிட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மிதிவண்டி, சைக்கிள் எல்லாம் ஒன்றுதாப்பா.. சைக்கிளுக்கு தமிழில் மிதிவண்டி என்று கூறி அவரை சமாதானப்படுத்தினர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications