“தீபம் ஏற்றச் சொன்னால் ஏற்றி விடலாமே.. தமிழக அரசு உச்சநீதிமன்றம் போக வேண்டியதில்லை!” - சீமான்
ஈரோடு: திருப்பரங்குன்றத்தில் தர்கா அருகில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செல்ல வேண்டியதில்லை என்றும், தீபம் ஏற்ற சொன்னால் ஏற்றிவிட வேண்டியதுதானே எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் செல்லத் தேவையில்லை. தீபம் ஏற்றச் சொன்னால் ஏற்றி விடலாமே. தர்காவில் இஸ்லாமியர்களுக்கு இருக்கும் உரிமை, விளக்கு ஏற்றுவதற்கும் இருக்கிறது. அவரவர் வழிபாட்டு உரிமை அவரவர்களுக்கு உள்ளது. இரு மத பெரியவர்களை அழைத்து வழிபாடு குறித்து பேசித் தீர்த்திருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

அதாவது, "நீதிமன்றம் உத்தரவிட்டால் விளக்கை ஏற்ற வேண்டியதுதானே? உங்களுக்கு இறை வழிபாட்டின் மீது நம்பிக்கை இல்லை என்றால் என்ன செய்வது? நான் முருகன் வழிபாட்டை முன்னெடுத்த போது, என்னை இழிவாக முரசொலியில் கட்டுரை எழுதி விமர்சித்து இருந்தீர்கள். ஆனால், நீங்கள் ஏன் முருகன் மாநாட்டை நடத்தினீர்கள்?
விளக்கேற்றுகிற உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதே தற்போதைய கேள்வி. திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் வழிபட உரிமை இருப்பதைப் போல.. முருகனுக்காக விளக்கேற்றுவதற்கும் உரிமை இருக்கிறது. அவரவர் வழிபாட்டு உரிமையை, அவர் அவருக்கு வழங்க வேண்டும்.
உன் மதம் சிறந்தது எனில் வழிப்படு. என் மதம் சிறந்தது வழிவிடு. இதுதான் கோட்பாடாக இருந்திருக்க வேண்டும். பிரச்சனை வரக்கூடாது எனில், இரு மதங்களின் உடைய பெரியவர்களை அழைத்து.. அவரவர் வழிபாட்டை மற்றவர் தலையீடு செய்யக்கூடாது என்று பேசி திருத்திருக்க வேண்டும். விளக்கேற்ற வேண்டுமென்றால் அறநிலையத்துறை துணை நின்றிருக்க வேண்டும். சிக்கந்தர் தர்காவில் ஆடு வெட்டி கந்தூரி விழா நடத்துகிறார்கள் என்றால்.. அரசு துணை நிற்க வேண்டும். இப்படித்தான் அரசு இந்திருக்க வேண்டும்.
திமுக தேர்தலுக்காக திட்டமிட்டு இந்த பிரச்சினையை பெரிதாக்குகிறது. இஸ்லாமிய வாக்குகள் அனைத்தும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று, திமுக விரும்புகிறது. தந்தூரி விழாவின் போது உயிர்பலி கூடாது என்று, இந்து சமய அறநிலையத்துறை கூறியதால்தான் இந்த பிரச்சனையை உருவானது. தேர்தல் அரசியலுக்காக திமுக இஸ்லாமிய வாக்குகளையும், பாஜக இந்துக்களின் வாக்குகளையும் மையப்படுத்தி அரசியல் செய்கிறது" என்று கூறியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications