அருந்ததியினர் பற்றிய சர்ச்சை.. 24 மணி நேரத்தில் சீமான் விளக்கமளிப்பார்.. நாதக வேட்பாளர் மேனகா!
அருந்ததியர் மக்கள் பற்றிய பேச்சு குறித்து சீமான் விரைவில் விளக்கமளிப்பார் என்று மேனகா கூறியுள்ளார்.
ஈரோடு: அருந்ததியர் மக்கள் குறித்து பேசியதற்கு 24 மணி நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளிப்பார் என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாதக வேட்பாளர் மேனகா நவநீதன் தெரிவித்துள்ளார். அதேபோல், அருந்ததியர் மக்களைப் பற்றி சீமான் எதுவும் தவறாக பேசவில்லை என்றும், வந்தேறிகள் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து நாம் தமிழர் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு சென்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சீமான் பிரச்சாரம்
அதில், "விஜயநகர மன்னர்கள் முதலியார்களிடம் பட்டாடை செய்து தரக் கேட்டார்கள். ஆனால் முதலியார்கள் வேறு ஆளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் விஜயநகர மன்னர்கள் சவுராஷ்டிராக்களை குஜராத்தில் இருந்து இறக்கினார்கள் என்று தெரிவித்தார். ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சமூகம் செங்குந்த முதலியார்கள். நாம் தமிழர் வேட்பாளரும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்தான்.

சீமான் பேச்சு
அதே போல், கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் எங்கள் ஆட்சியிலும் இதேபோல் தூய்மைப் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். எனவே வேறு வழியில்லாமல் ஆதிக் குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். இங்கு வசிக்கும் அருந்ததியர்கள்தான் அவர்கள் என்று தெரிவித்தார்.

தேர்தல் அலுவலர் எச்சரிக்கை
இதன் காரணமாக அருந்ததியர்கள் குறித்த சீமானின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அருந்ததியர் அமைப்புகள் சீமான் தங்களை அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் சீமான் பேச்சு தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தவறும்பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

24 மணி நேரம்
இதுகுறித்து விளக்கமளித்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாதக வேட்பாளர் மேனகா நவநீதன், அருந்ததியர் மக்களைப் பற்றி சீமான் எதுவும் தவறாக பேசவில்லை. வந்தேறிகள் என்ற வார்த்தையை சீமான் பயன்படுத்தவில்லை. வரலாற்றை மட்டும் தான் கூறினார். சில பேர் அதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அருந்ததி இன மக்கள் குறித்து பேசியதற்கு 24 மணி நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டிப்பாக பதில் அளிப்பார் என்று தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications