அதிமுக - திமுகவில் நட்பு.. பொள்ளாச்சி விஐபி.. விரைவில் தவெகவில் இணைவார்.. செங்கோட்டையன் சஸ்பென்ஸ்
ஈரோடு: இன்னும் சில நாட்களில் அதிமுக - திமுகவுடன் நட்பில் உள்ள பொள்ளாச்சி விஐபி ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று சஸ்பென்ஸ் வைத்து பேசியுள்ளார் செங்கோட்டையன். ஈரோட்டில் இன்று நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட செங்கோட்டையன், செய்தியாளர்கள் கேள்வியின் போது இவ்வாறு கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு விஜய்யும் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வழங்கினார்.

கை கூடாத செங்கோட்டையனின் முயற்சி
அரசியலில் கிட்டத்தட்ட 50 ஆண்டு கால அனுபவம் கொண்ட செங்கோட்டையன், விஜய்யின் கட்சியில் இணைந்த பிறகு படு ஆக்டிவாக இயங்கினார். முதலில் கரூர் சம்பவத்திற்கு பிறகு ஈரோட்டில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி காட்டினார். மேலும் அதிமுகவில் உள்ள அதிருபதி தலைவர்களை தவெகவிற்குள் கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டார்.
ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்ட ஒரு சிலரே வந்தாலும் செங்கோட்டையன் எதிர்பார்த்தது நடக்கமலேயே இருந்து வந்தது. டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை தவெக கூட்டணிக்குள் கொண்டு வர செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்ட நிலையில் அதுவும் கை கூடாமலே போனது.
பொள்ளாச்சி விஐபி தவெகவில்..
பின்னர் பேசிய செங்கோட்டையன், நாங்கள் இங்கு யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினாலே டெல்லியில் இருந்து அழைப்பு வந்துவிடுவதாகவும் ஆதங்கம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் ஈரோட்டில் இன்று தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட செங்கோட்டையன், குட்டிக்கதை சொல்லி இக்கட்டான சூழல் வந்தாலும் விஜய் பக்கம் நிற்போம் என்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம், தவெகவில் வேறு யாரும் இணைவார்களா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், "பொறுத்திருந்து பாருங்கள்.. அதிமுக - திமுகவில் நட்புடன் உள்ள பொள்ளாச்சி விஐபி.. விரைவில் தவெகவில் இணைவார்.." என்று கூறினார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!











Click it and Unblock the Notifications