எடப்பாடியை விட சீனியர் நான்.. கண்ணீர் விடும் நிலையில இருக்கேன்! வேதனையுடன் பேசிய செங்கோட்டையன்!
ஈரோடு: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை, கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டும் நீக்கப்பட்டிருந்த செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது அதிமுக அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில், கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும் எனவும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் 30ஆம் தேதி, பசுபொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடன் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் ஒன்றாகக் கலந்து கொண்டார்.
இந்த மூவரும் ஒன்றாக நிகழ்வில் பங்கேற்ற தகவல் வெளிவந்ததும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் அதிமுகவுக்கு க்கு எதிராக செயல்படுவோர் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வந்த நிலையில், செங்கோட்டையன் இவர்களுடன் ஒன்றாக பங்கேற்றதுகட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.

செங்கோட்டையன்
மேலும் அந்த நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "என்னை கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சிதான்," என பேசினார். இதனையடுத்து, நேற்று சேலத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. நீண்ட ஆலோசனை முடிவில் கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறியதாக கூறி, செங்கோட்டையனை அதிவில் இருந்து நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஏற்கனவே கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டும் நீக்கப்பட்டிருந்த செங்கோட்டையனின், அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.
கட்சி ஒற்றுமை
இந்நிலையில், கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும் எனவும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன் என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்," திமுகவின் B-டீமில் நான் இல்லை, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிதான் A1 ஆக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டப்படும் கொடநாடு விவகாரத்தில் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
எடப்பாடி பழனிசாமி
2026-இல் அதிமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என்றேன். 2026-இல் அதிமுக தோற்றால் கேள்வி கேட்பார்கள் என்பதால் தான் நான் பேட்டியளித்தேன். 1975-ல் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் பங்கேற்றேன். பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்.ஜி.ஆரிடம் பாராட்டுகளைப் பெற்றவன். அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக 2 முறை கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால்தான் கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசினேன்.
கட்சியில் சீனியர்
தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான். கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கான பரிந்துரைக் கடிதத்தை எல்லோரிடமும் ஒப்புதல் பெற்றவன் நான். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன்." என கூறியுள்ளார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications