ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருவேப்பிலை போல் தூக்கி எறிந்துவிட்டார்களே.. கதறி வெடித்து அழுத தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ!

Google Oneindia Tamil News

ஈரோடு: எனக்கு சீட் வழங்கவில்லை, கருவேப்பிலை போல் பயன்படுத்திவிட்டு என்னை தூக்கி எறிந்துவிட்டார்கள் என எம்எல்ஏ தோப்பு கே வெங்கடாசலம் கதறி அழுததால் அவரது ஆதரவாளர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.

Recommended Video

    கருவேப்பிலை போல் தூக்கி எறிந்துவிட்டார்களே.. கதறி வெடித்து அழுத தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ - வீடியோ

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எம்எல்ஏ., தோப்பு என்.டி. வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதில் பெருந்துறை தொகுதிக்கு எனக்கு மீண்டும் சீட் வழங்கப்படாததற்கு இன்டர்நெல் பாலிடிக்ஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    நான் கட்சிக்கும் இயக்கத்திற்கும் பொதுமக்களுக்கும் தொகுதி மக்களுக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என அனைவருக்கும் விசுவாசமாக இருக்கிறேன். பெருந்துறை தொகுதியில் எனக்கு மீண்டும் சீட்டு வழங்காததற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் பவானி எம்எல்ஏ.,வுமான கே.சி. கருப்பண்ணன்தான் காரணம்.

    எப்படிங்க என்னை புறக்கணிக்கலாம்?.. திமுகவில் விழும் முதல் விக்கெட்.. பாஜகவிற்கு தாவும் அந்த டாக்டர்!எப்படிங்க என்னை புறக்கணிக்கலாம்?.. திமுகவில் விழும் முதல் விக்கெட்.. பாஜகவிற்கு தாவும் அந்த டாக்டர்!

    குடிநீர் திட்டம்

    குடிநீர் திட்டம்

    பெருந்துறை தொகுதிக்கு கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தடுத்தார் என்பதற்காகத்தான் எனக்கும் அவருக்கும் விரோதம் இருந்தது தவிர தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. அதேபோல் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவிக்கு அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவருக்குதான் தற்போது சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

    பெருந்துறை தொகுதி

    பெருந்துறை தொகுதி

    கடந்த 4 நாட்களாக பெருந்துறை தொகுதியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த பிரச்சாரத்திற்கு இதுவரை என்னையும் எனது ஆதரவாளர்களையும் அழைக்கவில்லை இது மன வேதனை அளிக்கிறது. நான் மாற்றுக் கட்சியை சேர்ந்தவன் அல்ல.

    சீட் வழங்கவில்லை

    சீட் வழங்கவில்லை

    இந்த நிலை என்னோடு போகட்டும் இனி எந்த அதிமுக தொண்டனுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது. நான் என்ன தவறு செய்தேன், எனக்கு சீட் மறுக்கப்பட்டது என தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம், எனக்கு சீட் வழங்காமல் இழைக்கப்பட்டதால் தான் அதிமுக ஆட்சிக்கு வரமுடியும் என அவர்கள் நினைத்திருந்தால் அதனை நான் முழு சம்மதத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்.

    முக்கிய ஆலோசனை

    முக்கிய ஆலோசனை

    அதிமுக ஆட்சி அமைய வேண்டும். தலைமை மீது எந்த குற்றச்சாட்டும் நான் வைக்கவில்லை. எனது தொண்டர்கள் சீட்டு வழங்க வேண்டும் என கேட்கிறார்கள். பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இதுவரை என்னை அழைக்கவில்லை. பெருந்துறை தொகுதியில் மீண்டும் சீட் வழங்காதது குறித்து தனது ஆதரவாளர்களுடன் பெருந்துறை எம்எல்ஏ., தோப்பு வெங்கடாசலம் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    அப்போது கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த எம்எல்ஏ. தோப்பு வெங்கடாச்சலம், பேசிக்கொண்டிருக்கும்போது, நான் என்ன தவறு செய்தேன். என்னை கருவேப்பிலை போல் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகிறார்களே, என கூறியவாரே கண்ணீர் மல்க கதறி அழுதார். சிறிது நேரம் தொண்டர்களும் கதறி அழுதனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Thoppu Venkatachalam broke down in discussion with his supporters for not giving seat to contest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X