அடுத்தடுத்து மாஸ் காட்டி வரும் தோப்பு வெங்கடாச்சலம்.. தொகுதி மக்கள் ஹேப்பி!
பெருந்துறை எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
ஈரோடு: நலத்திட்ட உதவி, விலையில்லா செல்போன் என அடுத்தடுத்த வேலைகளில் தீவிரமாக இறங்கி வருகிறார் முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம்!
சமீபகாலமாகவே அதிமுகவில் மாஸ் காட்டி வருகிறார் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம். கட்சியில் இவர் ஒரு சீனியர்.. எனினும் 2 வருஷத்துக்கும் மேலாக அமைச்சர் பதவிக்காக முயன்று வருகிறார். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

இதனால் எம்பி தேர்தலுக்கு பிறகு, இவர் வேறு கட்சிக்கு தாவ போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரபரத்தன. ஆனால் இந்த எல்லா யூகங்களும் தவிடு பொடியாகின. இன்னும் சொல்ல போனால், நடந்து முடிந்த எம்பி தேர்தலில் முடிவினால்தான், தோப்பு வெங்கடாச்சலம் தரப்பு உற்சாகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
கோபிசெட்டிபாளையம், பவானி தொகுதியைவிட, தன்னுடைய பெருந்துறை தொகுதியில் திமுகவின் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்தது. இதுதான் தோப்பு வெங்கடாசலத்தின் உற்சாகத்துக்கு காரணம். அது மட்டுமில்லை... இதுவரை தொகுதிக்குள் செய்த நலத்திட்டங்கள், மக்களிடம் பழகும்முறை, உள்ளிட்டவைகளால்தான் பெருந்துறையின் பெரும்பாலான வாக்கு சதவீதத்தை தன்னிடம் தக்க வைத்து கொள்ள முடிந்ததாக கூறப்படுகிறது.

எனவே விரைவில், அதிமுகவில் இவரது செல்வாக்கு மேலும் உயரும் என்றும் இப்போதே பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும், வழக்கம்போல தன்னுடைய தொகுதி மக்களுக்கு அடுத்தடுத்த நலத்திட்ட உதவிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம் தோப்பு.
நேற்றுகூட, 108 அங்கன்வாடி பணியாளர்களுக்கு பிரதம மந்திரியின் போஷன் அபியான் திட்டத்தின்கீழ் விலையில்லா கைபேசி வழங்கினார். மொடக்குறிச்சி எம்எல்ஏ வி.பி.சிவசுப்ரமணியன் முன்னிலை நடந்த இந்த விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள். ஆக மொத்தம்.. கூடிய சீக்கிரம் தோப்பு வெங்கடாச்சலம் கட்சிக்குள் முக்கிய பொறுப்புடன் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications