செங்கோட்டையனுக்கு ஷாக்! ஈரோட்டில் விஜய் பொதுக் கூட்டம் தேதி மாற்றம்!
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவளத்தாம்பாளையம் பகுதியில் வரும் 16ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பொதுக் கூட்டம் நடத்துவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேதி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் 16 ஆம் தேதி விஜய் பொதுக் கூட்டம் நடத்தவிருந்த நிலையில் அதன் தேதி வரும் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காவல் துறையினர் 84 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அவற்றில் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்ய முடியாததால் தேதி மாற்றப்பட்டுள்ளது. தேதி மாற்றத்திற்கு பிறகும் காவல் துறை அனுமதி தராவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். விஜயமங்கலம் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளோம் என்றார்.
ஈரோடு மாவட்டத்தில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி தவெகவின் செங்கோட்டையன் அனுமதி கேட்டிருந்தார். இதற்காக பவளத்தாம்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது.
அதற்கு காவல் துறையிடம் இருந்து மறுப்பு கடிதம் வந்ததாக கூறப்பட்ட நிலையில் அது போல் எதுவும் வரவில்லை என செங்கோட்டையன் நேற்று முன் தினம் மறுத்திருந்தார். ஈரோடு மாவட்டத்தில் இருந்து விஜய்யின் எழுச்சி பயணம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஜய்யின் பொதுக் கூட்ட தேதி 16-லிருந்து டிசம்பர் 18-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
-
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications