Sengottaiyan: இந்தமுறையும் மிஸ் ஆகாது.. கோபியில் முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்கிய செங்கோட்டையன்
ஈரோடு: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை தேர்தல் போட்டியை கடுமையாக்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாகவே அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தவெக கொங்கு மண்டல அரசியல்
நடிகர் விஜய் தவெக கட்சியின் முதல் மாநாட்டில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு. கூட்டணி ஆட்சி என்கிற திரியை கிள்ளி போட்டார். தற்போதுவரை விஜய் கட்சியுடன் யாரும் கூட்டணி சேரவில்லை. அதேநேரத்தில் தாங்கள் இருக்கிற கூட்டணியில் விஜய் பெயரை சொல்லி பேரத்தை அதிகரிக்கும் வியூகத்தை கடைபிடிக்கிறார்கள்.
அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து பலர் தவெகவில் இணைந்துள்ளனர். முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகை தவெகவிற்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அந்தக் கட்சிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையன் பிரச்சாரம்
செங்கோட்டையன், அருண் ராஜ் என அந்தக் கட்சியின் முக்கிய முகங்கள் பலர் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னதாகவே அருண்ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அதேபோல செங்கோட்டையனும் கோபிசெட்டிப்பாளையத்தில் பிரச்சாரம் தொடங்கிவிட்டார்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் செங்கோட்டையன் 9 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். தவெகவில் இணைவதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். 2026 தேர்தலிலும் செங்கோட்டையன் கோபி தொகுதியில் தான் போட்டியிடுகிறார்.
எதிர்க்கட்சிகள் ஷாக்
இன்று காலை அதிகாரபூர்வமாக கோபி தொகுதியில் அவர் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டார். பொது மக்களுக்கு லட்டு கொடுத்து தனக்கு விசில் சின்னத்தில் ஆதரவளிக்குமாறு வாக்கு சேகரித்தார். தேர்தல் மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிற்கு முன்னதாகவே செங்கோட்டையன் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அந்தப் பகுதியில் உள்ள திமுக, அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications