ஜெயக்குமாருக்கு அதிமுகவில் சீட் கிடைக்காது.. தவெகவுக்கு தாராளமாக வரலாம்.. செங்கோட்டையன் அழைப்பு!
சென்னை: அதிமுகவில் ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்காது என்று தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதனால் தவெகவுக்கு ஜெயக்குமார் தாராளமாக வரலாம் என்று கூறியுள்ள செங்கோட்டையன், தவெக காரணமாகவே காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் சீட் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் தவெக பக்கம் செல்ல வேண்டும் என்று பேசி வந்தனர். விஜய்யுடன் சென்றால் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் வளர்க்க முடியும் என்று கூறி வந்தனர். அதேபோல் விஜய் ஆட்சியில் பங்கு என்று அறிவித்திருந்தார். இதே கோரிக்கையை திமுகவிடம் காங்கிரஸ் கட்சி கேட்டு வந்தது.

கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் திமுகவுக்கு பிடி கொடுக்காமல் இருந்ததால், தவெக - காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று சொல்லப்பட்டது. விஜய்யும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் நேற்றிரவு திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டது.
இதனால் தவெக தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்து விடப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆட்சியில் பங்கு என்று அறிவித்த போதும் விஜய்யுடன் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், காங்கிரஸ் எப்போதும் திமுக கூட்டணியில் தான் இருந்திருக்கிறது. திமுக - காங்கிரஸ் இடையில் ஒரு கருத்து வேறுபாடு எழுந்தது.
தவெகவால் காங்கிரஸ் கட்சிக்கு பயன் கிடைத்துள்ளது. என்டிஏ கூட்டணியாக இருந்தாலும், திமுக கூட்டணியாக இருந்தாலும் சரி.. எங்களை காட்டி கூடுதல் சீட்டு பெறும் என்ற நிலை உள்ளது. எங்களை காட்டி கூடுதல் சீட்டுகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. தவெக தனித்துப் போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
அதேபோல் ஜெயக்குமாருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கப் போவதில்லை.. அவர் வேண்டுமானால் தவெகவுக்கு தாராளமாக வரலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யுடன் சசிகலா தரப்பு கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்ல்கான பணிகள் மதுரையில் நடந்து வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications