Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழைப்பழம் சாப்பிட்ட ஈரோட்டு சிறுவன்.. உணவு குழாயில் இருந்து தவறி மூச்சுக் குழாய்க்குள் சென்றதா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது. தற்போது சிறுவனுடைய உடல் பிரதே பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மகனின் சடலத்தை கண்டு பெற்றோர் கதறி அழும் காட்சி காண்போரை நிலைகுலைய வைத்து வருகிறது. என்ன நடந்தது சிறுவனுக்கு?

ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த தம்பதி மாணிக்கம்-மகாலட்சுமி.. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் சாய்சரண் மற்றும் 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

Erode Banana and 5 year old Boy

இவர்கள் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்கள்.. எனவே குழந்தைகள் இருவரையும் அவர்களது பாட்டி வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.

வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன்

அந்தவகையில், நேற்றைய தினமும் தம்பதி இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டார்கள்.. அப்போது இரவு நேரம், சிறுவன் சாய் சரண் விளையாடி கொண்டிருந்தபோது, அங்கிருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டுள்ளான்.. வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்தபோதே சாய் சரணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டி, உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சாய்சரணை அழைத்து சென்றுள்ளார்.. ஆனால் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்துவிட்டனர். இதையடுத்து, தகவலறிந்த கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

என்ன நடந்தது?

சிறுவன் வாழைப்பழத்தை எடுத்து, சாப்பிடும்போது, அதை விழுங்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளான்.. உடனே இருமல் வந்து, புரையேறி விட்டது.. உடனே வாழைப்பழம் உணவுக்குழாய்க்கு பதிலாக மூச்சுக்குழாயில் போய் அடைத்து கொண்டதாம்.. இதனால் நுரையீரலுக்கு செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் தடைப்பட்டுள்ளது.. சிறுவனுக்கு மூச்சுவிட முடியாமலும் போயுள்ளது.. அதற்கு பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர்.

எனவே, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர், சிறுவனின் மூச்சு குழாயில் வாழைப்பழம் அடைத்திருக்கிறது, நிலைமையும் மோசமாக உள்ளது. அதனால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அரசு டாக்டர்கள் அறிவுரை

அதற்கு பிறகே அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்றுள்ளனர்.. ஆனாலும் சிறுவனின் உயிர் பிரிந்துவிட்டது.. இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கடித்துவிட்டது. பிறகு சிறுவன் சாய்சரண் மூச்சுக்குழாயில் அடைத்திருந்த வாழைப்பழத்தை டாக்டர்கள் அகற்றினார்கள்..

சிறுவன் உயிரிழப்பு குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சொல்லும்போது, "சாய்சரணை மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன்பே உயிர்போயிருந்தது. வாழைப்பழம் மூச்சுக்குழாயை அடைத்த 5 நிமிடத்தில் உயிர் போயிருக்க வாய்ப்புள்ளது.. எப்போதுமே குழந்தைகளுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை தரும்போது, சிறிய துண்டுகளாக வெட்டி தர வேண்டும்.

ஒருவேளை ஏதாவது சாப்பிடும்போது இதுபோல மூச்சுத்திணறல் ஏற்பட்டால், நெஞ்சில் கை வைத்தபடி தலையை நன்றாக தாழ்த்தி பிடித்து, முதுகில் வேகமாக தட்ட வேண்டும்.. அப்படி தட்டினால் உணவுக்குழாயில் சிக்கிய பொருள் வெளியே வரக்கூடும்" என்றனர்.

ஈரோட்டில் 5 வயது சிறுவன், மூச்சுக்குழாயில் வாழைப்பழம் சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+