Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. "ஈவிகேஎஸ் இளங்கோவன் தகுதிநீக்கம் செய்யப்படுவார்.." எஸ்பி வேலுமணி பரபர

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிமுகவுக்காக வாக்கு சேகரித்தார். இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் நிச்சயம் மிக பெரிய வெற்றியை அடைவார் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் திமுக தரப்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸில் இருந்து ஈவிகஎஸ் இளங்கோவன், அதிமுகவில் இருந்து தென்னரசு, நாம் தமிழர் கட்சியில் இருந்து மேனகா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக

அதிமுக

இதில் அதிமுக தரப்பில் முதலில் குழப்பமான ஒரு சூழலே இருந்தது. அதிமுகவில் எடப்பாடி தரப்பு தென்னசரசுவையும் ஓபிஎஸ் தரப்பு செந்தில் முருகனையும் வேட்பாளர்களாக அறிவித்தனர். இருவரும் இரட்டை இலைக்கு உரிமை கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வேட்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் சொன்ன நிலையில், ஓபிஎஸ் வேட்பாளர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். தென்னசரசு வேட்புமனு தாக்கல் செய்து, அவருக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டது.

பிரசாரம்

பிரசாரம்

இதை.டுத்து அதிமுகவினர் அங்கு தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இந்தத் தேர்தலில் வென்று ஆளும் தரப்பு அதிர்ச்சி தர வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளார்... அமமுகவும் வாபஸ் பெற்றுள்ள நிலையில் இரட்டை இலை வாக்குகள் முழுமையாக அதிமுகவுக்கு இந்த முறை வர உள்ளது. அதேபோல அதிமுக வலுவாக உள்ள கொங்கு மண்டலம் என்பதால் எதிர்பார்ப்பு ஏகிறியுள்ளது. மூத்த தலைவர்கள் பலரும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தென்னரசுவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

 எஸ்பி வேலுமணி

எஸ்பி வேலுமணி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி வேலுமணி, "மக்கள் இந்தத் தேர்தலில் எங்களுக்கு மிக பெரிய வரவேற்பு கொடுக்கிறார்கள். செல்லும் இடமெல்லாம் ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள்.. இதை வைத்து பார்க்கும் போதே அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் வெற்றி கண் முன்னே தெரிகிறது. ஈரோட்டை பொறுத்தவரை இங்கு அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்ததே அதிமுக தான். இங்குள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியை கட்டியவரும் எடப்பாடி தான்.

 கூட்டு கொள்ளை

கூட்டு கொள்ளை

திமுக ஆட்சி அமைத்து 21 மாதங்கள் ஆகிவிட்டன.. இதுவரை ஒரு முக்கிய திட்டத்தை கூட அவர்கள் கொண்டுவரவில்லை.. பணத்தை மட்டுமே நம்பி இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். 21 மாதத்தில் கூட்டு கொள்ளை அடித்து சம்பாதித்த பணத்தை வைத்து தேர்தலை வெல்ல வேண்டும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.. ஆனால், அது நடக்காது.. மக்களை பணத்தை வைத்து வாங்க முடியாது. திமுகவினர் உங்களுக்கு பணத்தை கொடுத்தால் வாங்கிக்கோங்க.. ஆனால், உங்கள் வாக்கை இரட்டை இலைக்கே போடுங்கள்.

 21 ஆயிரம் எங்கே

21 ஆயிரம் எங்கே

இத்தனை மாதங்களாக அவர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.. பால் விலையை உயர்த்தியுள்ளார்கள்... மின்சார கட்டணத்தையும் சொத்து வரியையும் உயர்த்தியுள்ளார்கள்.. இதனால் மக்கள் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.. மகளீருக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கதொகை கொடுப்பதாக சொன்னார்கள். அது என்னானது என்றே தெரியவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிவிட்டது.. வாக்கு கேட்க வந்தால் அந்த 21 ஆயிரம் ரூபாய் என்ன ஆனது என்று கேளுங்கள். இதையெல்லாம் மக்கள் மறந்துவிட மாட்டர்கள். அனைத்தும் தேர்தலில் எதிரொலிக்கும்..

தகுதிநீக்கம்

தகுதிநீக்கம்

அதிமுக வேட்பாளர் நிச்சயம் மிக பெரியளவில் வெல்வார். ஈரோடு இடைத்தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று வீதிக்கு 4 ஆபீசை போட்டுள்ளனர். இப்படி பல விதிமீறல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்தால் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இதில் அதிமுக பெறும் வெற்றி என்பது, அடுத்து வரும் மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும்.. அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் வென்று எடப்பாபழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வருவார்,, இதற்கான அடித்தளமாக இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இருக்கும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+