Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு அருகே வீட்டுக்கடன் இஎம்ஐக்காக நிதி நிறுவன ஊழியர்கள் கேவலமான பேச்சு.. நடுங்க வைத்த ஹேமபிரியா

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நாராயணதாஸ் மற்றும் ஹேமபிரியா தம்பதி வீடு கட்டுவதற்காக, கோபியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 10 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார்கள். கடந்த 3 தவணைகளை அவர்கள் சரியாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடன்கொடுத்த நிறுவனத்தினர் வீட்டின் முன்பு நின்று அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் ஹேமபிரியா எடுத்த முடிவு, தனியார் நிறுவனத்தின் மீது உறவினர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

வீட்டுக்கடன் வாங்குவோர் தங்களால் எந்த சூழ்நிலையையும் கையாண்டு கட்ட முடியும் என்றால் மட்டும் கடன் வாங்கலாம்.. வேலையை மட்டும் நம்பி கடன் வாங்கக்கூடாது. ஏனெனில் வேலை போனால் கடனை கட்ட முடியாது. எல்லா சூழ்நிலைகளிலும் கடனை கட்டக்கூடியவர்களாக இருந்தால் வாங்கலாம்.. ஒரு வேளை வேலை போனாலும், வேறு நிறுவனத்தில் எளிதாக வேலைக்கு சேரக்கூடிய சூழல் உள்ளவர்கள் வாங்கலாம்.

What did Hemapriya do in front of finance employees asking for home loan EMI near Erode

இல்லை என்றால், எதிர்பாராத சூழலில் கடனை அடைக்க சொத்து, தங்கம் உள்பட மாற்றுவழிகள் அவர்களுக்கு சில காலம் தேவைப்படும். அப்படி தயாராக இருப்பவர்களும் வாங்கலாம்.. மற்றவர்கள் நிச்சயம் ஒருமுறைக்கு பல முறை யோசிக்க வேண்டும். ஏனெனில் வீட்டுக்கடனை பொறுத்தவரை உடனே முடிக்க முடியாது, பல வருடம் போகும். வாழ்க்கையில் பல வருட சம்பளத்தை தர வேண்டியதிருக்கும். ஈரோட்டில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

10 லட்சம் கடன்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பங்களாப்புதூா் எரங்காட்டூரைச் சேர்ந்த 55 வயதாகும் நாராயணதாஸ் என்பவருடைய மனைவி ஹேமபிரியா (46). இவர்களுக்கு, 19 மற்றும் 22 வயதில் 2 மகன்கள் இருக்கிறார்கள். நாராயணதாஸ் வீடு கட்டுவதற்காக கோபியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார்.

3 மாத தவணை

தவணைகளை சரியாக செலுத்தி வந்தவர், கடந்த 3 மாதமாக தவணையை அவர் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்த நிதி நிறுவனத்தின் சார்பில் 4 பேர் கொண்ட குழுவினர் 3 நாட்களாக நாராயணதாஸ் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு கடன் தவணையை செலுத்த கூறி அசிங்கமாக பேசியதாக கூறப்படுகிறது.

வற்புறுத்தல்

அப்போது வீட்டில் தனியாக இருந்த ஹேமபிரியா தனது கணவரும், மகன்களும் வெளியே சென்றுவிட்டதாகவும் அவர்கள் வந்த பிறகு கடன் தொகையை கட்ட ஏற்பாடு செய்வதாக கெஞ்சினாராம். ஆனால் நிதி நிறுவனத்தினர் அதை ஏற்றுக்கொள்ளாமல் வீட்டு சுவற்றில் இந்த வீட்டின் பெயரில் கடன் உள்ளது. அதனால் ஏலம் விடப்படும் என்று எழுதி வைத்துவிட்டு சென்றார்களாம். இதனால் ஹேமபிரியா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி மாலை 6 மணியளவில் மீண்டும் நாராயணதாஸ் வீட்டுக்கு சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் ஹேமபிரியாவிடம் கடன் தொகையை உடனே செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்களாம்.

மண்எண்ணெய் ஊற்றினார்

இதன் காரணமாக மனவேதனையடைந்த ஹேமபிரியா வீட்டுக்குள் சென்று, மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து நிதி நிறுவன ஊழியர்கள் முன்பே உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் உடல் கருகிய நிலையில் துடித்துள்ளார். அதைப்பார்த்த நிதி நிறுவன ஊழியர்கள் அங்கிருந்து ஓடிவிட்டார்களாம். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ஹேமபிரியாவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ஹேமபிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹேமபிரியாவின் உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே ஹேமபிரியா இறந்த தகவல் அறிந்ததும் அவருடைய உறவினர்கள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று திரண்டு வந்தனர். ஹேமாபிரியாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு ஹேமபிரியாவின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வழக்கு பதிவு

அப்போது, 'இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு, ஹேமபிரியாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு சென்றனர். இதற்கிடையே வீட்டுக்கடன் தவணையை கட்டச்சொல்லி ஹேமபிரியாவின் வீட்டுக்கு சென்று வற்புறுத்திய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது நாராயணதாஸ் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+