ஈரோட்டில் பிச்சை எடுக்க வைக்க குழந்தையை கடத்திய தம்பதி.. வாக்குமூலத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்
ஈரோடு: ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த தம்பதி ஈரோடு மாவட்டம் பவானியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள். வறுமையின் காரணமாக சொந்தமாக வீடு இவர்களுக்கு இல்லை.. வாடகைக்கூட வீடு இல்லை..இவர்கள் கிடைக்கும் இடத்தில் தூங்குவார்கள். இவர்களின் குழந்தை கடத்தப்பட்டது. கடத்திய தம்பதியை போலீசார் பிடித்தனர். பிச்சை எடுக்க வைக்க குழந்தையை கடத்தினோம்' என்று கைதான தம்பதி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பிளாட்பார்மில் படுக்கும் தம்பதிகளை குறிவைத்து சிலர் குழந்தைகளை திருடுவது நடக்கிறது. அப்படி திருடப்படும் குழந்தைகளை நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள். சிலர் குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்க பயன்படுத்துகிறார்கள். அப்படியான ஒரு கல் நெஞ்சம் உடைய தம்பதி ஈரோடு மாவட்டம் பவானியில் சிக்கியுள்ளனர்.

நெல்லூர் தம்பதி
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி கீர்த்தனா. இவர்கள் பிழைப்பு தேடி ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் குழந்தைகளுடன் ஈரோடு மாவட்டம் பவானியில் தங்கிக்கொண்டு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்கள். இரவு நேரங்களில் கிடைக்கும் இடத்தில் குழந்தைகளுடன் தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவர்களுக்கு என்று வாடகை வீடு கூட இல்லை
பவானி பாலத்தில் குழந்தை கடத்தல்
கடந்த மாதம் 16-ந் தேதி இரவு வெங்கடேசன் தனது மனைவி, குழந்தைகளுடன் பவானியை அடுத்த லட்சுமி நகர் கோணவாய்க்கால் பாலத்தின் கீழ் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வெங்கடேசனின் ஒன்றரை வயது குழந்தை வந்தனாவை கடத்திக்கொண்டு சென்றுவிட்டார்கள்
போலீசார் விசாரணை
பின்னர் தம்பதியை சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் குழந்தை கடத்தல் கும்பல் பற்றி தெரியவந்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜே.ேஜ.நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). ஏற்கனவே திருமணமான இவர் நித்தியா (38) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு நாமக்கல் மாவட்டம் ரெட்டிப்பட்டியில் வசித்து வந்துள்ளார்கள். இவர்கள் தான் குழந்தையை கடத்தி உள்ளார்களாம்.
பிச்சை எடுக்க வைக்க கடத்தல்
ரமேஷ், நித்தியா அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறுகையில், பொள்ளாச்சியில் வசித்து வந்த ரமேஷ், நித்தியாவை திருமணம் செய்ததால், நாமக்கல் மாவட்டத்தில் வசிக்க தொடங்கி உள்ளார்.. ரமேஷ் மீது பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் சுற்றியுள்ளார். இந்த நிலையில் ரமேசுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். எனவே எதிர்காலத்தில் தொடர்ந்து வருமானம் வேண்டும் என்பதற்காக குழந்தையை கடத்தி பிச்சை எடுக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
எப்படி கடத்தினார்கள்
இதற்காக எங்கு குழந்தையை கடத்தலாம் என்று தேடி வந்துள்ளனர். அப்போது தான் அவர்கள் பவானி பாலத்துக்கு அடியில் குழந்தை தூங்குவதை பார்த்தார்களாம் இதனை ரமேஷ், நித்தியா நோட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று பைக்கில் வந்து யாருக்கும் தெரியாமல் குழந்தையை கடத்தி சென்றுள்ளனர் என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், நித்தியாவை கைது செய்தனர்.கைதான ரமேஷ் மீது கோவை, பொள்ளாச்சி, மலையம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications