ஈரோடு பெருந்துறையில் மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த யோகநாதன்.. இப்படியாக ஆகணும்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூர் ஊராட்சி பகுதியில் சாலையில் சிறு பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் நிலையில் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஓட்டுநர் யோகநாதன் என்பவர் குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுக்காவுக்கு உட்பட்ட ஓடைக்காடு குன்னம்பதியை சேர்ந்த ஓட்டுநர் யோகநாதன். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும் சுதர்சன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, தனது தங்கையை பார்த்துவிட்டு கிணிப்பாளையம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு நேற்று இரவு சுமார் 10- மணிக்கு ஓட்டுனர் யோகநாதன் சென்றுள்ளார்.

அப்போது நெட்டச்செல்லாம்பாளையம் பகுதி வழியாக கணிப்பாளையம் சென்று கொண்டிருந்தபோது சாலையில் எந்தவித தடுப்புகளும் இல்லாமல் சிறு பாலம் அமைக்க தோண்டப்பட்ட குழியில் ஓட்டுநர் யோகநாதன் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிறு பாலம் கட்டும் குழியிலேயே உயிரிழந்து உள்ளார்.
அவ்வழியாக சென்ற கிராம மக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேட்டுப்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் ஐந்து இடங்களில் சிறு பாலம் கட்டுமான பணிகள் மற்றும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தத்தை பிரகாஷ் என்பவர் எடுத்து செய்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது என்ற எச்சரிக்கை பலகை மற்றும் பேரி கார்ட் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த விபத்து நிகழ்ந்து இருப்பதாகவும் உயிரிழந்த ஓட்டுனர் யோக நாதனுக்கு ஒப்பந்ததாரர் உரிய இழப்பீடு வழங்கும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெருந்துறை அருகே சிறு பாலம் கட்டுமான பணியின் போது எவ்வித பாதுகாப்பு எச்சரிக்கை பலகையும் இல்லாததால் ஓட்டுநர் பாலம் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications