Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. பதிவாகிய "டெண்டர் ஓட்டுகள்".. அப்படினா என்ன? தேர்தல் அதிகாரி அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த ஆண்டு இறுதியில் உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக தரப்பில் விசி சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதனிடையே நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதன்பின் திமுக vs நாதக இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. இரு தரப்பும் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்த நிலையில், பிப்.5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

erode east by election 2025 erode east election result 2025 2025 2025

வாக்குப்பதிவின் போது வளையக்கார தெருவில் பரிதா பேகம் என்ற பெண் தனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப் ஆகியவற்றுடன் வாக்களிக்க சென்றார். ஆனால் ஏற்கனவே பரிதா பேகத்தின் வாக்கு பதிவிவாகிவிட்டதாக கூறி தேர்தல் அலுவலர்கள் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், நான் இங்கே இருக்கும் போது எப்படி என்னுடைய வாக்கினை மற்றொருவர் செலுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும் பரிதா பேகம் கூறினார். இந்த சம்பவம் நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தின் காட்சியை நினைவுபடுத்தியது.

இதனால் எதிர்க்கட்சிகளும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு பதிவாகி இருப்பதாக குற்றம்சாட்டினர். இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ஈரோடு வளையக்கார வீதியில் பரிதா பேகம் என்பவரின் வாக்கு ஏற்கனவே போடப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின் அந்த வாக்காளருக்கு டெண்டர் வாக்கு போடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து, அவர் வாக்கு போடவில்லை. இதுபோல் நடந்த வேறு சம்பவங்களிலும் டெண்டர் வாக்குகள் போடப்பட்டுள்ளது.

இதுபோல் எத்தனை டெண்டர் வாக்குகள் போடப்பட்டுள்ளது என்ற விவரம் இப்போது இல்லை. இந்த வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு கொண்டு வரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். தனது வாக்கினை ஏற்கனவே போடப்பட்டதாக ஒருவர் புகார் அளித்தால், ஆய்வுக்கு பின் அவருக்கு 17பி டெண்டர் வாக்கு படிவம் அளிக்கப்படும்.

அதாவது பேலட் பேப்பர் மூலம் வாக்களிக்க செய்து, அதற்குரிய உறையில் சீலிட்டு வைக்கப்படும். அதன்பின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். வாக்குப்பதிவின் போது இந்த வாக்குகள் எண்ணப்படாது. வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி இடையில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் பட்சத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே டெண்டர் வாக்குகள் எண்ணப்படும். இதுவே டெண்டர் வாக்குக்கான விதிமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+