வாகன ஓட்டிகளே உஷார்.. ஈரோட்டில் பைக்கின் சீட்டிற்கு அடியில் கேட்ட உஷ் உஷ் சத்தம்.. ஓட்டுநர் கலக்கம்
ஈரோடு: ஈரோட்டில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளை எடுத்த போது அதில் உஷ் உஷ் என்று சத்தம் கேட்டது. இதனால் அதில் பாம்பு இருக்கிறது என்பதை இளைஞர் கண்டு பிடித்தார். அந்த நாகப்பாம்பை பாம்பு பிடிவீரர் கடும் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தினமும், வாகனத்தை எடுக்கும் முன்பு பார்த்துதான் எடுக்க வேண்டும். ஏனெனில் வாகனத்தில் பாம்புகள் குடியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகே காடுகள் உள்ளது என்றால், கண்டிப்பாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் வீட்டை சுற்றி மரம், செடிகள் அதிகம் முளைத்து புதர் மண்டிப்போய் கிடந்தாலும், பாம்புகள் அதிகமாக இருக்கும். பொதுவாக பாம்புகள் இரவில தான் இரை தேட வெளியில் வரும், பகலில் அவ்வளவு எளிதில் வராது.

எனினும் வெப்பத்தை விரும்பும் பாம்புகள் செடிகளை கடந்து வரும் போது, நீண்ட நாள் எடுக்காமல் இருக்கும் வாகனங்களில் ஏறி உறங்கும் வாய்ப்பு உள்ளது. சில பாம்புகள் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற பின்னர். திடீரென இரவில் இரை தேடி செல்லும் போது, வாகனத்தில் ஏறி பதுங்க வாய்ப்பு உள்ளது. ஸ்கூட்டி போன்ற வாகனங்களில் டிக்கியிலும், மற்ற வாகனங்களில் இன்ஜின் அருகிலும் பாம்புகள் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது.
அப்படித்தான் ஈரோட்டில் ஒரு மோட்டார் சைக்கிளில் ஐந்து அடி நீளமுள்ள கோதுமை நாகம் பதுங்கி இருந்தது. ஈரோட்டில் யுவா ஸ்டோர்ஸ் என்ற கடையின் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தில் தான் பாம்பு பதுங்கியிருந்தது. இதை கண்ட கடையின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
தீயணைப்பு துறையினரின் அழைப்பின் பேரில் பாம்பு பிடிவீரர் யுவராஜ் அங்கு வந்தார். அவர் இருசக்கர வாகனத்தில் சத்தம் வந்ததை வைத்து அங்கு பாம்பு பதுங்கி உள்ளது என்பதை கண்டுபிடித்தார் விஷமுள்ள கோதுமை நாகம் இருசக்கர வாகனத்தின் சீட்டிற்கு அடியில் பதுங்கி இருந்தது. அந்த பாம்பை நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சீட்டை கழற்றி பாம்பை பிடித்த பாம்பு பிடிவீரர் யுவராஜ், அதனை பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications