வேறு எதோ காரணம் இருக்கு! திடீரென டெல்லி பறந்த ஆளுநர் ரவி.. உற்று பார்த்த திமுக.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஆளுநர் ஆர். என் ரவி இன்று திடீரென டெல்லிக்கு சென்றது ஏன் என்ற கேள்வி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Recommended Video

    Governor பண்றது தப்பு | அடித்து சொன்ன துரைமுருகன்

    சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார் .

    இதுதான் சனாதன தர்மம். . இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கம் உள்ளது. அது தமிழ்நாட்டில் உள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் சனாதன கலாச்சாரம் என்று குறிப்பிட்டார்.

    அதோடு இல்லாமல் திராவிட கலாச்சாரம் இடையில் தோன்றியது என்றும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இவரின் செயல்பாடுகள் சில அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகின்றன.

    அரசியல் செயல்பாடு

    அரசியல் செயல்பாடு

    சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவி ஈரோட்டிற்கு சென்றார். அங்கு உள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்தினார். திருப்பூர் மாவட்டத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை. 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து கடுமையாக போராடி, தூக்கு மேடை ஏறியவர் தீரன் சின்னமலை. இவரின் சிலை சென்னையில் கிண்டியில் இருக்கும் போதிலும் ஆளுநர் ரவி ஈரோட்டிற்கு சென்றது முக்கியமான மூவாக பார்க்கப்பட்டது.

    முக்கியமான மூவ்

    முக்கியமான மூவ்

    குறிப்பிட்ட ஜாதி பிரிவினரை கவரும் வகையில் ஆளுநர் செயல்படுவதாக, பாஜகவிற்கு ஆதரவாக அவர் செயல்படுவதாக கூறப்பட்டது. கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு ஆதரவான அலையை ஏற்படுத்த இப்படி பயணம் செய்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் தீரன் சின்னமலை சுதந்திர போராட்ட வீரர் என்பதால் அவருக்கு மரியாதை செய்ய ஆளுநர் ரவி வந்தார். இதில் அரசியல் கிடையாது என்றும் ஆளுநர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஒண்டி வீரன்

    ஒண்டி வீரன்

    இந்த நிலையில்தான் நேற்று இன்னொரு சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர். என் ரவி கலந்து கொண்டார். இதற்காக திருநெல்வேலியில் உள்ள கேடிசி நகர் தனியார் மண்டபத்தில் நடந்த விழாவிலும் ஆளுநர் ஆர். என் ரவி கலந்து கொண்டார். இதில் ஒண்டி வீரனின் பெருமைகள் பற்றி ஆளுனர் ஆர். என் ரவி பேசினார். ஆளுநர் இப்படி தொடர்ச்சியாக முக்கியமான தலைவர்களின் நினைவு மற்றும் பிறந்த தின விழாவில் கலந்து கொள்வது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.

    டெல்லி

    டெல்லி

    இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி இன்று திடீரென டெல்லிக்கு செல்கிறார். டெல்லியில் தமிழ்நாடு அரசியல் விவகாரங்கள் குறித்து ஆளுநர் ஆர். என் ரவி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் நிலவும் அதிமுகவினர் இடையிலான மோதல் குறித்தும் ஆளுநர் ஆர். என் ரவி டெல்லியில் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தன்னிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் பற்றியும் அவர் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய பல்கலைக் கழக வேந்தர்கள் மசோதா பற்றி ஆளுநர் ரவி நேற்றுதான் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் ஆளுநர் தரப்பு வட்டாரங்கள் இதை பின்பு மறுத்தன. இந்த நிலையில்தான் இன்று திடீரென ஆளுநர் ரவி டெல்லி பயணம் மேற்கொள்வதை திமுக தரப்பு தீவிரமாக கவனித்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+